லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்த படத்தில் அந்த நடிகரா? ஹீரோயினால் கல்லா கட்டலாம் போலயே!...

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்த முக்கிய படம் ஒன்று அவருக்கு பதிலாக தற்போதைய நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து ஹிட்டடித்து வருகிறார். மாநகரம் படத்தில் தொடங்கிய லோகேஷின் வெற்றி பயணம் சமீபத்தில் லியோ திரைப்படம் வரை நீண்டு கொண்டே செல்கிறது. விக்ரம் மற்றும் விஜயை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தையும் இயக்க இருக்கிறார். இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் […]

By :  Akhilan
Update: 2024-05-28 05:25 GMT

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்த முக்கிய படம் ஒன்று அவருக்கு பதிலாக தற்போதைய நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து ஹிட்டடித்து வருகிறார். மாநகரம் படத்தில் தொடங்கிய லோகேஷின் வெற்றி பயணம் சமீபத்தில் லியோ திரைப்படம் வரை நீண்டு கொண்டே செல்கிறது. விக்ரம் மற்றும் விஜயை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தையும் இயக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!

ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற மியூசிக் ஆல்பத்தில் லோகேஷ் நடிக்கவும் செய்திருந்தார். நடிப்பின் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததால் சிலரிடம் கதை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவர் புதுமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்க இருந்த ஒரு கதையில் நடிக்க இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் திடீரென ரஜினிகாந்த் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் இப்படத்தில் இருந்து விலகினார். தற்போது அப்படத்தில் ஹீரோவாக புதுமுக நடிகராக லவ் டுடே படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரேமலு படத்தின் நாயகி மமீதா பைஜூ இருப்பதாக தகவல்கள் தெரிகிறது.

இதையும் படிங்க: ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ரஞ்சனியை நியாபகம் இருக்கிறதா? இப்ப என்ன செய்றார் பாருங்க

புஷ்பா மற்றும் குட் பேக் அக்லி படத்தை தயாரித்து வரும் பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோலிவுட்டை தற்போது தெலுங்கு நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்சி செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

பிரபல நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை குறிக்கோளாக வைத்து தமிழ் நிறுவனங்களை விட தெலுங்கு நிறுவனங்களுக்கே அதிக அளவில் ஒப்புதல் தருவதாகவும் கூறப்படும் நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸின் இரண்டாவது படம் குறித்த அறிவிப்புகள் கசிந்துள்ளது.

Tags:    

Similar News