ரோபா சங்கர் நிலைதான் மஞ்சுளாவுக்கும் வந்துச்சா?.. ஓப்பனாக கூறிய வனிதா…
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக முதன் முதலாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரோபோ சங்கர். அவரின் தனிப்பட்ட நகைச்சுவை திறனால் விஜய் டிவியில் இருந்தப்போதே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்தார் ரோபோ சங்கர். இதனையடுத்து 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு அதனை தொடர்ந்து வாயை மூடி பேசவும், மாரி போன்ற […]
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக முதன் முதலாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரோபோ சங்கர். அவரின் தனிப்பட்ட நகைச்சுவை திறனால் விஜய் டிவியில் இருந்தப்போதே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்தார் ரோபோ சங்கர். இதனையடுத்து 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு அதனை தொடர்ந்து வாயை மூடி பேசவும், மாரி போன்ற பல படங்களில் வாய்ப்புகளை பெற துவங்கினார். ரோபோ சங்கர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தீவிர உடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் ரோபோ சங்கர். இதனால் அவரது உடல் எடை மிகவும் குறைந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார் ரோபோ சங்கர். தற்சமயம் அவரும் அவரது மனைவியும் ஒரு பேட்டியில் இதுக்குறித்து பேசியிருந்தனர்.
மஞ்சுளாவிற்கு வந்த அதே நோய்:
அதில் கூறும்போது ரோபோ சங்கருக்கு ஜாண்டிஸ் நோய் இருந்ததாகவும் அது அவரது இரத்தத்தில் கலந்துவிட்டதாகவும் அதனால் அவரை சரி செய்ய பெரும் கஷ்டப்பட்டதாகவும் கூறியிருந்தனர். அந்த பேட்டியில் தொகுப்பாளராக இருந்த நடிகை வனிதா இதற்கு பதிலளிக்கும்போது தனது தாய்க்கும் இந்த பிரச்சனை இருந்ததாக கூறியுள்ளார் வனிதா.
அவரது தாய் மஞ்சுளாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை இந்த பிரச்சனை ஏற்பட்டு இதனால் அவரது உடல்நிலை மோசமானது என கூறியுள்ளார் வனிதா.
இதையும் படிங்க: சங்கரோட அந்த படத்தில் வரலட்சுமி நடிக்க வேண்டியது! சரத்குமாரால் கைமீறி போன வாய்ப்பு