ஒண்ணு தலன்னு சொல்லு!.. இல்லை தளபதின்னு சொல்லு!.. மார்க் ஆண்டனி டீமை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!..
மற்ற நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்தே ஒரு படத்தை 100 கோடி வசூல் வேட்டை படமாக மாற்ற முடியுமா? என்றால் அதற்கு சமீபத்திய உதாரணமாக வந்துள்ள படம் தான் மார்க் ஆண்டனி. ஆமாங்க.. நடிகர் விஷால் தளபதி விஜய்யின் பெயரையும், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் பெயரையும் பயன்படுத்தியே தல தளபதி ரசிகர்களை ஒன்றாக தியேட்டருக்கு வர வைத்து கல்லா கட்டி விட்டனர். இதையும் படிங்க: என்ன ஷாலும்மா இதெல்லாம்!.. நல்லா நாலா பக்கமும் காத்து வாங்குதே!.. […]
மற்ற நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்தே ஒரு படத்தை 100 கோடி வசூல் வேட்டை படமாக மாற்ற முடியுமா? என்றால் அதற்கு சமீபத்திய உதாரணமாக வந்துள்ள படம் தான் மார்க் ஆண்டனி.
ஆமாங்க.. நடிகர் விஷால் தளபதி விஜய்யின் பெயரையும், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் பெயரையும் பயன்படுத்தியே தல தளபதி ரசிகர்களை ஒன்றாக தியேட்டருக்கு வர வைத்து கல்லா கட்டி விட்டனர்.
இதையும் படிங்க: என்ன ஷாலும்மா இதெல்லாம்!.. நல்லா நாலா பக்கமும் காத்து வாங்குதே!.. ஓபனா காட்டி ஓரங்கட்டுறாரே!..
ஆனால், மார்க் ஆண்டனி டிரெய்லரை பார்த்து உள்ளே வந்த ரசிகர்களை கடைசி வரை தூங்காமலும் தியேட்டரை விட்டு துண்டைக் காணோம் துணியக் காணோம் என ஓட விடாமல் பார்த்துக் கொண்டது ஆதிக் ரவிச்சந்திரன் வைத்த அஜித் படங்களின் ரெஃபரன்ஸோ அல்லது ஆரம்பத்திலேயே விஷால் போட்ட தளபதி விஜய்க்கு தேங்க்ஸ் கார்டோ இல்லை.
மொக்கை படத்தை எங்கிட்ட கொடுத்தாலும், மாஸ் படமாக மாற்றி விடுவேன் என நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா படம் முதல் பாதிக்கு மேல் படுத்தே விட்ட நிலையில், வித்தியாசமான நடிப்பால் தூக்கி நிறுத்திய தூண் எஸ்.ஜே. சூர்யாவால் தான் என நடுநிலையான ரசிகர்கள் எஸ்.ஜே. சூர்யாவையும் அவரது அசுரத்தனமான நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.. மகளை நினைத்து உருகும் விஜய் ஆண்டனி!…
எஸ்.ஜே. சூர்யாவுக்கு பிறகு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது யாரென்றால், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கேஜிஎஃப் படத்துக்கு மியூசிக் போட்டதை போல காது கிழிய வைத்த ஜிவி பிரகாஷ் குமார் தான்.
ரஜினிகாந்த் சொன்னது போல ரீ ரெக்கார்டிங் முன்பு வரை ஜெயிலர் சுமாருக்கும் மேலான படம் என பேசி அனிருத்தை பாராட்டியது போல, இந்த படத்தில் ரீ ரெக்கார்டிங் மற்றும அந்த 3 பழைய பாடல்களை ஜிவி பிரகாஷ் பயன்படுத்தவில்லை என்றால் விஷாலுக்கு இந்த முறை பலத்த அடி விழுந்திருக்கும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் மார்க் ஆண்டனி படம் 100 கோடி வசூல் ஈட்டியதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு மற்றுமொரு காரணம் வேற யாரும் இல்லைங்க நம்ம சில்க் ஸ்மிதா தான். சிலுக்கா என எஸ்.ஜே. சூர்யா மீசை சாராக போட்ட ஆட்டம் தான் படத்தை டாப் கியர் போட்டு கொண்டாட வைத்தது.