எம்ஜிஆர்-என்.எஸ்.கே வாழ்க்கையில் நடந்த ஒரே மாதிரியான அனுபவம்! - இப்படியும் சில மனிதர்கள்!

தமிழ் சினிமாவில் இரு பெரும் கொடை வள்ளலாக வாழ்ந்த நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் என்.எஸ்.கே மற்றும் எம்ஜிஆர். என்.எஸ்.கே வின் வழியை பின்பற்றி வந்தவர்தான் எம்ஜிஆர். அவ்வப்போது எம்ஜிஆருக்கும் சில ஆலோசனைகளையு வழங்கி வருவார் என்.எஸ்.கே. தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் என்.எஸ்.கே. பிறர் மனதை புண்படுத்தாத அளவுக்கு சிந்தைக்கு புரியும் அளவில் நகைச்சுவை பண்ணுவதில் மன்னனாக திகழ்ந்தார் என்.எஸ்.கே. அந்த காலத்தில் இவர் மீது நடிகர் , நடிகைகளுக்கு ஒரு […]

By :  Rohini
Update: 2023-05-24 05:04 GMT

nsk

தமிழ் சினிமாவில் இரு பெரும் கொடை வள்ளலாக வாழ்ந்த நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் என்.எஸ்.கே மற்றும் எம்ஜிஆர். என்.எஸ்.கே வின் வழியை பின்பற்றி வந்தவர்தான் எம்ஜிஆர். அவ்வப்போது எம்ஜிஆருக்கும் சில ஆலோசனைகளையு வழங்கி வருவார் என்.எஸ்.கே. தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் என்.எஸ்.கே.

பிறர் மனதை புண்படுத்தாத அளவுக்கு சிந்தைக்கு புரியும் அளவில் நகைச்சுவை பண்ணுவதில் மன்னனாக திகழ்ந்தார் என்.எஸ்.கே. அந்த காலத்தில் இவர் மீது நடிகர் , நடிகைகளுக்கு ஒரு தனி மரியாதையே உண்டு. சினிமாவில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்.எஸ்.கே வந்து தான் அதை தீர்த்து வைப்பாராம். மேலும் இவர் சொல்லை யாரும் மீறவும் மாட்டார்களாம்.

nsk1

அந்த அளவுக்கு பெரிய மனிதராக கருதப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் என்.எஸ்.கே வாழ்விலும் எம்ஜிஆர் வாழ்விலும் நடந்த ஒரே மாதிரியான சம்பவம் பற்றித்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயல்பாகவே என்.எஸ்.கே ஒரு கொடை வள்ளல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதை தெரிந்து கொண்டு ஒரு கர்ப்பிணி பெண் என்.எஸ்.கேயிடம் உதவி கேட்டு வந்து நின்னாராம். என்.எஸ்.கேயும் அந்த பெண் கையில் 100 ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணை அழைத்து மேலும் ஒரு 100 ரூபாய் பணத்தை கொடுத்தாராம். அதற்கு இந்தப் பெண் இப்போதுதானே 100 ரூபாய் கொடுத்தீர்கள்? என கேட்க அதற்கு என்.எஸ்.கே ‘இந்தா பாரும்மா இந்த 100 ரூபாய் நீ நன்றாக நடித்ததற்கு ’ என சொன்னாராம்.

nsk1

அதாவது அந்த பெண் பணத்திற்காக கர்ப்பிணி பெண்ணாக நடித்தாராம். ஆனாலும் அதை தெரிந்துகொண்டும் என்.எஸ்.கே அந்த பெண்ணை எதுவும் சொல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறார். இதே சம்பவம் தான் எம்ஜிஆர் வாழ்விலும் நடந்ததாம். இதே மாதிரி ஒரு பெண் வந்து பணம் கேட்க ஆனால் அதை எம்ஜிஆர் தெரிந்து கொண்டு அவருக்கு தேவையான பணத்தையும் கொடுத்து புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாராம்.

இதையும் படிங்க : உயிரை கொடுத்து நடித்த நாசர்… ரிஜெக்ட் செய்த பானுமதி… ஏன் தெரியுமா?

Tags:    

Similar News