ஹாலிவுட் லெவல்ல சிவாஜி படம் இருக்கேன்னு பாராட்டிய புரட்சித்தலைவர்... என்ன படம்னு தெரியுமா?

ரஜினி, கமலுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் கோலோச்சியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடும். அவர்களது படங்களுக்குத் தான் போட்டியே தவிர நிஜ உலகில் இருவரும் நல்ல நண்பர்கள். அவ்வப்போது படங்கள் வரும்போது இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வர். அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிவாஜி நடித்த ஒரு படத்தை ஆங்கிலப்படம் போல இருக்கிறதே என வியந்து பாராட்டியுள்ளார். அது என்ன படம்? அப்போது நடந்தது என்னன்னு பார்ப்போமா... அந்தக்காலத்தில் சிவாஜி […]

By :  sankaran v
Update: 2024-06-21 08:30 GMT

Sivaji MGR

ரஜினி, கமலுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் கோலோச்சியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடும். அவர்களது படங்களுக்குத் தான் போட்டியே தவிர நிஜ உலகில் இருவரும் நல்ல நண்பர்கள். அவ்வப்போது படங்கள் வரும்போது இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வர்.

அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிவாஜி நடித்த ஒரு படத்தை ஆங்கிலப்படம் போல இருக்கிறதே என வியந்து பாராட்டியுள்ளார். அது என்ன படம்? அப்போது நடந்தது என்னன்னு பார்ப்போமா...

அந்தக்காலத்தில் சிவாஜி படங்களின் வசனங்கள் மட்டும் ஒலித்தட்டில் ஒலிக்கச் செய்வார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் இதில் பிரபலம். இதனால் படத்தின் ஒவ்வொரு வசனமும் ரசிகனுக்கு அத்துப்படியாகி விடும். பெரும்பாலும் சிவாஜி படங்களுக்கு ஆரூர்தாஸ் தான் வசனம் எழுதுவார்.

Puthiya paravai

விதி படத்துக்கும் அவர் தான் வசனம் எழுதினார். அப்போது பட்டி தொட்டி எல்லாம் அந்தப் படத்தின் வசனங்களை விழாக்காலங்களில் ஒலிக்கச் செய்வர். அந்த வகையில் தொழிலாளி படம் சூட்டிங் நேரத்தில் 'இன்று இரவு நானும், எம்ஜிஆரும் சிவாஜி நடித்த 'புதிய பறவை' படத்தைப் பார்க்கப் போறோம். நீ அங்க இருந்தா நல்லாருக்காது.

அதனால் கிளம்பிப் போயிடு'ன்னு சொல்கிறார் சின்னப்பா தேவர். 'ஆமா படத்துக்கு வசனம் எழுதுன நான் அங்க இருந்தா நீங்க ப்ரீயா விமர்சனம் பண்ண முடியாது. நான் கிளம்புறது நல்லது தான்'னு சொல்லிட்டு ஆரூர்தாஸ் போயிடுறாரு.

மறுநாள் எம்ஜிஆர் ஆரூர்தாஸை மனதார பாராட்டுகிறார். நேத்து புதிய பறவை படம் பார்த்தேன். ரொம்ப பிரமாதமா இருக்கு. இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருந்தது. வசனங்கள் எல்லாம் ரொம்ப அருமையா இருந்தது. சிவாஜி நடிப்பு சூப்பர். சரோஜாதேவி ரொம்ப அழகு. சௌகார் ஜானகியைப் பத்தி சொல்லவே தேவையில்லை. பாடல்கள்ல அவருக்கு பிரமாதமான நடிப்புன்னு சொன்னாராம். இப்படி நடந்த சம்பவத்தை ஆரூர்தாஸே சொன்னாராம்.

Tags:    

Similar News