நாடகத்தில் நடிக்கும்போது அடி தாங்க முடியாமல் அழுத எம்ஜிஆர்... இப்படி எல்லாமா நடந்தது?

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த அளவுக்கு அவர் மறைந்தும் கூட இன்று வரை பேரும் புகழுடனும் இருக்கிறார் என்றால் அவர் பட்ட அவமானங்களும், கஷ்டங்களும், கடின உழைப்பும் தான் காரணம். துள்ளித்திரிந்து ஜாலியாக விளையாடும் அந்த பால்ய பருவத்திலேயே கஷ்டங்களைப் பட்டவர் எம்ஜிஆர். அதைப் பற்றிப் பார்க்கலாமா... எம்ஜிஆர் ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கோபாலமேனன் இலங்கையில் இறந்து விடுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு அந்தக் குடும்பம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. அதன்பிறகு […]

By :  sankaran v
Update: 2024-06-22 02:30 GMT

MGR

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த அளவுக்கு அவர் மறைந்தும் கூட இன்று வரை பேரும் புகழுடனும் இருக்கிறார் என்றால் அவர் பட்ட அவமானங்களும், கஷ்டங்களும், கடின உழைப்பும் தான் காரணம். துள்ளித்திரிந்து ஜாலியாக விளையாடும் அந்த பால்ய பருவத்திலேயே கஷ்டங்களைப் பட்டவர் எம்ஜிஆர். அதைப் பற்றிப் பார்க்கலாமா...

எம்ஜிஆர் ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கோபாலமேனன் இலங்கையில் இறந்து விடுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு அந்தக் குடும்பம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. அதன்பிறகு பிழைப்பு தேடி கேரளாவுக்கு வர்றாங்க.

இதற்கிடையில் எம்ஜிஆருடன் பிறந்தவர்கள் 5 பேர். பொருளாதார நெருக்கடியில் 3 பேர் இறந்து விடுகிறாங்க. இப்போ அவரும், அண்ணன் சக்கரபாணியும் மட்டும் இருக்காங்க. அங்கும் சொந்தக்காரர்களின் கொடுமை தாங்க முடியாம வேலு நாயர் என்ற சொந்தக்காரர் மூலம் தமிழ்நாட்டுக்குப் பிழைப்பு தேடி வர்றாங்க.

இதையும் படிங்க... ரொமான்ஸ் வராதுன்னு கிண்டலடித்த சினிமா உலகம்!.. அந்த படத்தில் புகுந்து விளையாடிய எம்.ஜி.ஆர்..

அவர் கொடுக்கும் சொற்ப வருமானத்தின் மூலமாகத் தான் எம்ஜிஆரின் தாயார் சத்யபாமா பிள்ளைகள் இருவரையும் வளர்க்கிறாங்க. இன்னொரு உறவினர் பின்பாட்டு நாராயணன் நாயர் மூலமா எம்ஜிஆர் நாடகக் கம்பெனிக்கு வர்றார். இவர் மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பின்பாட்டு பாடுபவர்.

அவரும் எம்ஜிஆரின் தாயாருடைய அனுமதியைப் பெற்று பிள்ளைகளை பிழைப்புக்காக நாடகக் கம்பெனிக்கு மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். மனதைக் கல்லாக்கிக் கொண்டு சத்யபாமாவும் பிள்ளைகளை வழி அனுப்புகிறார்.

ஆனால் அந்தக் குழந்தைகள் தாயாரைப் பிரிய முடியாமல் அழுதபடி செல்கின்றனர். ஆனால் நாடகக்கம்பெனியில் குழந்தைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. அப்போது எம்ஜிஆருக்கு 6 வயது. காலை 5 மணிக்கு அவரை எழுப்பிவிட்டு உடற்பயிற்சி செய்யச் சொல்வார்களாம்.

தொடர்ந்து பல்வேறு நடிப்புகளை சொல்லிக் கொடுப்பாராம். இவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் காளி என்.ரத்னம். இவர் 'சபாபதி' படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர்.

Kali N Rathnam

இவரைப் பார்த்தால் எல்லாரும் பயப்படுவாங்க. இவர் தான் எல்லாருக்கும் நடிப்புக் கத்துக் கொடுப்பார். அவர் கையால் அடி வாங்கி அடி வாங்கித் தான் நடிப்பைக் கத்துக்கொண்டார் எம்ஜிஆர். சில சமயங்களில் வலி தாங்க முடியாமல் அழுதே விடுவாராம். அப்படித் தான் 'நல்லதங்காள்' நாடகத்தின்போதும் நடந்தது.

இதில் 7வது குழந்தையாக நடித்தவர் எம்ஜிஆர். அப்போது அவர் பிரமாதமாக அழுத படி நடித்தாராம். அதற்குக் காரணம் அங்கு பயிற்சிக் கொடுத்த பலரும் அவருக்கு உண்மையிலேயே அழுகை வரவேண்டும் என்பதற்காக பிரம்பால் அடித்து விடுறாங்க. அதனால் எம்ஜிஆரின் நடிப்பு தத்ரூபமாக இருந்ததாக மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினாங்களாம்.

நாடகம் முடிந்ததும் காளி என்.ரத்னம் 'நீ சரியா செய்யலங்கறதுக்காகத் தான்டா உன்னை அடிச்சேன். இப்ப பாரு மக்கள் எல்லாம் உன்னைப் பாராட்டுறாங்க இல்ல... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டா தான்டா பெரிய ஆளா ஆக முடியும்'னு சமாதானம் செய்தாராம். அதுவரை என்ன நடக்குதுன்னே தெரியாம அழுத எம்ஜிஆர் என்ற அந்த குழந்தை அப்போது சிரிக்க ஆரம்பித்ததாம்.

Tags:    

Similar News