நான் வந்தா அது மரியாதையா இருக்காது..! கண்ணதாசன் ஊர்வலத்தில் கடுப்பான எம்.ஜி.ஆர்..

by Akhilan |
நான் வந்தா அது மரியாதையா இருக்காது..! கண்ணதாசன் ஊர்வலத்தில் கடுப்பான எம்.ஜி.ஆர்..
X

MGR: தமிழ் சினிமாவின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இருக்கும் நட்பு பலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். கண்ணதாசனுக்காக அவர் செய்ததை ரசிகர்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படும் அளவுக்கே இருக்குமாம்.

எம்.ஜி.ஆர் முதல்வரான பின்னர் கவியரசரை தமிழகத்தின் அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தார். அதன் பின்னர் அவர் இறந்த செய்தி கேட்டதும் முதல் ஆளாக அவர் உடலுக்கு மரியாதை செலுத்த நேரில் வந்தாராம். கண்ணதாசன் உடலைப் பார்த்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: எப்ப பாத்தாலும் ‘லியோ’ பத்தியே பேசுறீங்களே! சத்தமில்லாமல் ரோலக்ஸ் செய்ற காரியத்தை பார்த்தீங்களா?

இதை தொடர்ந்து கண்ணதாசன் உடலை இறுதி ஊர்வலத்துக்கு வாகனத்தில் எடுத்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவர் முகம் கீழே இருந்த மக்களுக்கு தெரியவே இல்லையாம். உடனே வாகனத்தில் ஏறிய எம்.ஜி.ஆர், கண்ணதாசனின் உடலை ஸ்டூல் மீது வைத்து கட்டினாராம். இப்போது மக்களுக்கு அவர் முகம் தெளிவாக தெரிந்ததாம். அதனை தொடர்ந்து அவர் கீழே இறங்கியிருக்கிறார்.

பின்னர் இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆரும் நடந்து வந்து இருக்கிறார். ஆனால் அவரை கண்ட ரசிகர்கள் கத்தி விசில் அடித்து ஆரவாரம் செய்து இருக்கிறார்கள். கைத்தட்டல் சத்தமும் அதிகமாக கேட்டு இருக்கிறது.

இதனால் அங்கு நடந்து வந்த எம்.ஜி.ஆர் ஷாக்காகி விட்டாராம். இதற்கு மேல் தான் நடந்து வந்தால் அது கண்ணதாசனுக்கே மரியாதையாக இருக்காது என நினைத்தாராம்.

இதையும் படிங்க: ராஜ்கிரண் அந்த விஷயத்துல என்ன அழவச்சார்!.. சீக்ரெட்டை பகிர்ந்த ‘பூவே உனக்காக’ பட நடிகை...

கண்ணதாசன் ஊர்வலத்தில் மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தப்பட்டார். அருகில் இருந்த தன் சகாக்களிடம், இது கவிஞருக்கு மரியாதையாக இருக்காது. நான் காரிலேயே கிளம்பி நேராக இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு வந்து விடுகிறேன் என்றாராம்.

இதனை தொடர்ந்து செயலாளரைக் கூப்பிட்டு காரை வரவழைத்துப் புறப்பட்டு விட்டார். நேராக மைதானத்துக்கு சென்ற எம்.ஜி.ஆர் கண்ணதாசனுக்கு தன்னுடைய மரியாதையை கடைசியாக தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story