எப்ப பாத்தாலும் ‘லியோ’ பத்தியே பேசுறீங்களே! சத்தமில்லாமல் ரோலக்ஸ் செய்ற காரியத்தை பார்த்தீங்களா?

Published on: October 14, 2023
vijay
---Advertisement---

Rolex Surya:  நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பல மொழிகளில்  தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியா திஷா பதானி நடிக்கிறார்.இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: மெக்கானிக்காக மாறிய சிவாஜி… ஆனா கடைசியில் நடந்தது தான் மாஸ்.. நடிகர் திலகமுனா சும்மாவா..!

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்றுக் கொண்டிருக்க இப்பொழுது அதுவும் முற்றிலுமாக முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு பிறகு சூர்யா தன் கைவசம் ஏராளமான படங்களை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கிடப்பிலேயே இருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தையும் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யா இருக்கிறார். ஆனால் அதற்கு முன் சுதா கொங்கராவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

இதையும் படிங்க: லியோ கிளைமேக்ஸில் தெறிக்கவிட்ட அர்ஜூன்!.. பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் செஞ்சதுதான் ஹைலைட்!…

ஏற்கனவே சுதா கொங்கராவுடனான கூட்டணியில்  மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமாக சூரறைப் போற்று திரைப்படம் அமைந்தது. தேசிய விருதையும் தட்டிச் சென்றது. அதனால் மறுபடியும் இந்த கூட்டணி மேல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சுதா கொங்கரா – சூர்யா இணையும் புதிய படத்திற்கான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறாராம். அதனால் தனது எடையைக் குறைப்பதற்கான முயற்சியிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மூன்று ரோல்களை இரவு, பகலுமாக 11 நாளில் முடித்துக் கொடுத்த ‘பலே பாண்டியா’… ஆச்சரியமா இருக்கே..!

மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கேரக்டர் ஆயுத எழுத்து  படத்தில் அவர் நடித்த கேரக்டர் மாதிரிதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒரு எழுச்சி மிகுந்த மாணவனாக நடிக்க இருக்கிறாராம்.

மேலும் அவருடன் இணைந்து நஸ்ரியா, துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

 

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.