மெக்கானிக்காக மாறிய சிவாஜி… ஆனா கடைசியில் நடந்தது தான் மாஸ்.. நடிகர் திலகமுனா சும்மாவா..!

Sivaji Ganesan: நடிகர் திலகமாக இன்று கொண்டாடப்படும் சிவாஜிகணேசன். அந்த இடத்தினை பிடிக்க எக்கசக்க போராட்டம் நடத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிப்பே வேணாம் என சினிமாவை விட்டே விலகி மெக்கானிக்காவும் வேலை செய்தாராம். இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தனது வாழ்க்கையை வி.சி.கணேசன் என்ற பெயரில் சிவாஜி கணேசன் புத்தகமாக எழுதியிருக்கிறார். 'வி' என்பது விழுப்புரத்தை குறிப்பதாக கூறப்பட்டது. சில பிரச்னைகளால் தந்தை ஜெயிலுக்கு போனார். சிவாஜி 4 வயது இருக்கும் போது தான் தந்தையை பார்த்தாராம்.

இதையும் படிங்க: லியோவில் த்ரிஷாவை வைத்து இப்படியொரு எல்சியூ கனெக்ட்டா?.. வெளியான செம மேட்டர்.. ஒருவேள இருக்குமோ?.

பின்னர் பெற்றோர்களின் அனுமதியின்றி,சிவாஜி கணேசன் ஏழு வயதில் ஒரு மேடை நாடக நிறுவனத்தில் சேர முடிவு செய்தார். 10 வயதில், திருச்சிராப்பள்ளிக்குச் சென்று சங்கிலியாண்டபுரத்தில் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பரதநாட்டியம், கதக் மற்றும் மணிப்பூரி நடனங்களில் தொடர்ச்சியாக பயிற்சி பெற்றார். எத்தனை பெரிய வசனம் கொடுத்தாலும் அசராமல் பேசுவதில் திறமை கொண்டவராம். மதுரையில் ஸ்ரீபாலகானா நாடக சபையில் சின்ன பொன்னுசாமி தான் சிவாஜிக்கு நடிப்பு கற்று கொடுத்தாராம்.

இதையும் படிங்க: லியோ கிளைமேக்ஸில் தெறிக்கவிட்ட அர்ஜூன்!.. பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் செஞ்சதுதான் ஹைலைட்!...

இதே நாடக சபாவில் தான் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்,ராதாவும் பயிற்சி பெற்று பின்னர் சில பல பிரச்னைகளால் அந்த சபாவில் இருந்து விலகி சென்றுவிட்டாராம். அதன் பின்னர் நாடக குழு கேரளாவுக்கு சென்று விட்டதாம். அங்கு கிருஷ்ணன் பிள்ளை தலைமையில் நாடகம் நடத்தப்பட்டது.

அங்கு தான் முதல்முறையாக மனோகரா வேடத்தில் சிவாஜி நடித்தாராம். அதை பார்த்த பலரும் சிவாஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்களாம். கேரளா மகாராஜா சிவாஜியின் நடிப்பை பாராட்டி வெள்ளி தட்டினை பரிசாக கொடுத்தாராம்.

அதை தொடர்ந்து மழை காரணமாக நாடகம் நடக்காமல் போக அவர் நண்பர் தாயுடன் காட்டு வழியாக வீட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் நண்பனுக்கு பாம்பு கடித்து விட பின்னர் கஷ்டப்பட்டு அவரை காப்பாற்றினார்களாம்.

அதை தொடர்ந்தே சிவாஜி கணேசன் இந்த நடிப்பெல்லாம் வேண்டாம். சினிமாவுக்கே போக தேவையில்லை எனக் கூறி மெக்கானிக் வேலையை செய்தாராம். ஆனால் நடித்த அவரால் சும்மா இருக்க முடியவில்லையாம். சில காலம் கழித்து மீண்டும் நடிப்புக்கே திரும்பி விட்டார் என அந்த புத்தகத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

 

Related Articles

Next Story