மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட உதவி!.. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட எம்ஜிஆர்.. பழச மறக்காத மக்கள் திலகம்

MGR: எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் பேசப்படுபவர். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்த எம்ஜிஆர் நிஜ வாழ்வில் மிகச்சிறந்த மனிதரும் கூட. மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் இவர். இவர் நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரை பிடிக்காதவர்கள் என எவருமே இருக்க முடியாது. ஏழை […]

Update: 2023-11-03 08:54 GMT

MGR: எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் பேசப்படுபவர். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்த எம்ஜிஆர் நிஜ வாழ்வில் மிகச்சிறந்த மனிதரும் கூட.

மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் இவர். இவர் நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரை பிடிக்காதவர்கள் என எவருமே இருக்க முடியாது. ஏழை எளிய மக்களுக்கு பல வகைகளில் உதவியவர்.

இதையும் வாசிங்க:சாவித்திரி ஆசை ஆசையாய் கொடுத்த உப்புமா… கீழே துப்பிய கமல்…!

இல்லை என்று வருவோருக்கு தன்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்வார். இவருக்கு மிகவும் நெருங்கியவர் மேஜர் சுந்தர்ராஜன். இவர் பட்டினத்தார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர். மேலும் மோட்டார் சுந்தரம் பிள்ளை,லட் கல்யாணம், திருடன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் இவர் பிரபலமானவர்.

இவரும் எம்ஜிஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. எம்ஜிஆருடன் இணைந்து விவசாயி, நல்ல நேரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு முறை எம்ஜிஆர் வீட்டில் மதிய உணவுக்கு சென்றுள்ளார். அப்போது எம்ஜிஆர் மதிய உணவாக வகை வகையான உணவினை பறிமாறியுள்ளார். அதனை பார்த்த மேஜர் நீங்கள் இந்த மாதிரிதான் சாப்பிடுவீர்களா என கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆர் நான் கூழும் குடிப்பேன், இப்படியும் சாப்பிடுவேன் என பதிலளித்துள்ளார். அவ்வளவு எளிமையானவர் எம்ஜிஆர்.

இதையும் வாசிங்க:சாவித்ரியிடம் போட்டி போட்ட சரோஜா தேவி… கன்னட பைங்கிளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் திலகம்…

பின் ஒரு நாள் மேஜர் சுந்தர் ராஜன் மேடை நாடகத்தில் நடிக்க செல்ல வேண்டுமாம். 6.30 மணிக்கு நாடகத்தினை ஆரம்பிக்க வேண்டும். அதனை எம்ஜிஆரிடம் கூறுங்கள் என மேஜர் கூறியுள்ளார். ஆனால் யாருமே அதனை எம்ஜிஆரிடம் கூறவில்லையாம். அதனால் இவரே நேரடியாக எம்ஜிஆரிடம் சென்றுள்ளார்.

அப்போது எம்ஜிஆரிடம் சென்று ‘நான் நாடகம் நடிக்க செல்ல வேண்டும். அதனால் என்னை விரைவில் அனுப்புங்கள்’ என கூறியுள்ளார். எம்ஜிஆரோ அங்கிருந்தவர்களை அழைத்து ‘நாடகம் என்பது எவ்வளவு முக்கியம் என தெரியுமா?. அது மக்களை நேரடியாக மகிழ்விக்கக்கூடியது. அதனால் அதற்கு போகவிடாமல் தடுப்பது மிகவும் தவறு’ என கூறி மேஜர் சுந்தர்ராஜனை அங்கிருந்து அனுப்பிவிட்டாராம்.

இதையும் வாசிங்க:ஒரே நாளில் ரஜினியை மயக்கிய லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?

தான் பல மேடைகளில் நாடகம் நடித்ததால் மற்றொருவரின் மனதை புரிந்து கொள்ளும் எம்ஜிஆர் படபிடிப்பில் யார் நாடகத்தில் நடிக்க வேண்டும் என கேட்டாலும் அவரது படக்காட்சிகளை விரைவாக முடித்து கொடுக்க சொல்வாராம். இதனால் நடிகர்களுக்கே மிகவும் பிடித்த மனிதர் எம்ஜிஆர்தான் என மேஜர் சுந்தர்ராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News