அடுத்த ரவுண்டுக்கு தயாரான சமந்தா முன்னாள் கணவர்.! பொண்ணு யாரு தெரியுமா.?!

தற்போதெல்லாம், விவாகரத்து, பிரிவு என்பது மிக சாதாரணமாகிவிட்டது. எந்த ஜோடி எப்போது பிரிவார்கள் என யாராலும் கணிக்க கூட முடியவில்லை. திருமணமான கொஞ்ச வருடங்கள் ஆன ஜோடி தான் பிரிகிறார்கள் என பார்த்தால், கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழிந்த ஜோடிகளும் பிரியத்தான் செய்கின்றனர் அப்படி நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் என்றால் அது சமந்தா - நாக சைதன்யா ஜோடிதான். இவர்கள் இருவரும் ஒன்றாக படம் நடிக்க ஆரம்பித்தது முதல் காதலிக்க ஆரம்பித்தனர்.அதன் பின்னர் தான் இருவீட்டார் சம்மதத்துடன் […]

By :  Manikandan
Update: 2022-04-18 01:44 GMT

தற்போதெல்லாம், விவாகரத்து, பிரிவு என்பது மிக சாதாரணமாகிவிட்டது. எந்த ஜோடி எப்போது பிரிவார்கள் என யாராலும் கணிக்க கூட முடியவில்லை. திருமணமான கொஞ்ச வருடங்கள் ஆன ஜோடி தான் பிரிகிறார்கள் என பார்த்தால், கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழிந்த ஜோடிகளும் பிரியத்தான் செய்கின்றனர்

அப்படி நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் என்றால் அது சமந்தா - நாக சைதன்யா ஜோடிதான். இவர்கள் இருவரும் ஒன்றாக படம் நடிக்க ஆரம்பித்தது முதல் காதலிக்க ஆரம்பித்தனர்.அதன் பின்னர் தான் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வருடங்கள் மட்டுமே இவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.

அதன் பின்னர், கருத்து வேறுபாடு, காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் இருவருமே தங்கள் துறைகளில் மீண்டும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். அண்மையில் கூட புஷ்பா படத்தில் படு கவர்ச்சியாக ஆட்டம் ஆடி ரசிகர்களை கிறங்க வைத்தார் சமந்தா.

இதையும் படியுங்களேன் - உண்மைகளை இப்டி போட்டு உடைச்சிடீங்களே.! கமல் படக்குழு மீது கோபத்தில் ரசிகர்கள்.!

தற்போது வெளியான தகவல் என்னவென்றால், விரைவில் , நாக சைதன்யாவுக்கு திருமணம் செய்ய நாகார்ஜுனா குடும்பம் முடிவு செய்துள்ளதாம். அந்த வகையில், நாக சைதன்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. அதன் படி, பெண் நிச்சயம் சினிமா துறை சம்பந்தப்பட்ட பெண்ணாக இருக்காது என திட்டவட்டமாக கூறுகின்றனர். ஏற்கனவே பட்டதெல்லாம் போதும் என்கிற மனபக்குவதற்கு வந்துவிட்டனர் போல.

Tags:    

Similar News