மேக்கப் போட்டதும் நம்பியாரை முறைத்த சிவாஜி!.. அட கேரக்ட்ரா மாறுவதுன்னா இதுதான் போல!..
Nambiyaar: தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தினை சிலர் நடிகர்கள் பிடித்து வைத்து இருக்கின்றனர். அது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான் வில்லன் நடிகர் நம்பியார். முக பாவனையில் தொடங்கி அவர் கை ஆக்ஷன் வரை ரசிகர்களுக்கு அத்துப்படி. நாடக கம்பெனியில் இருந்து தன் நடிப்பை தொடங்கினார். நாடகத்தினை மையமாக கொண்டு 1935ம் ஆண்டு பக்த ராம்தாசு திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதையும் வாசிங்க:‘தங்கலான்’ படத்தின் சுவாரஸ்யமான […]
Nambiyaar: தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தினை சிலர் நடிகர்கள் பிடித்து வைத்து இருக்கின்றனர். அது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான் வில்லன் நடிகர் நம்பியார்.
முக பாவனையில் தொடங்கி அவர் கை ஆக்ஷன் வரை ரசிகர்களுக்கு அத்துப்படி. நாடக கம்பெனியில் இருந்து தன் நடிப்பை தொடங்கினார். நாடகத்தினை மையமாக கொண்டு 1935ம் ஆண்டு பக்த ராம்தாசு திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இதையும் வாசிங்க:‘தங்கலான்’ படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை லீக் செய்த விக்ரம்! சோன முத்தா போச்சா?
இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றது படக்குழு. அந்த படத்தில் நகைச்சுவை வேடமான மாதண்ணா வேடத்தில் தான் நம்பியார் நடித்து இருந்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படம். அதையடுத்து ஒரே நேரத்தில் சினிமாவிலும், நாடகத்தில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொண்டு நடித்தார். அது அவருக்கு பெரிதும் கைக் கொடுத்தது. தொடர்ச்சியாக சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆஸ்தான வில்லனாக அவதாரம் எடுத்தார். அவரின் வில்லத்தனத்தினை யாரும் தொடவே முடியாது.
ஆனால் அப்படிப்பட்ட நம்பியாரே சிவாஜியை பல நேரங்களில் மெச்சிக்கொள்வாராம். இப்படி ஒருமுறை எங்க ஊர் ராஜா படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. முதலில் நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து விட்டனராம். அவருக்கு ப்ரேக் விட நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார்.
இதையும் வாசிங்க:6 மாதம் என்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா செய்த ட்விஸ்ட்..!
அந்த நேரம் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி நம்பியாரை பார்த்து பணிவுடன் வணக்கம் சொல்லி விட்டு நகர்ந்தாராம். பின்னர் மேக்கப் போட்டு விட்டு உள்ளே சென்று வெளியில் வந்தவர் நம்பியாரை திமிராக பார்த்து சென்றாராம். அங்கிருந்த அவர் நண்பர்கள் இப்போது தான் பணிவாக சொல்லிட்டு போனாரு. இப்போ திமிரா பார்க்கிறாரே எனக் கேட்டு இருக்கின்றனர்.
அதற்கு நம்பியார் சிரித்து கொண்டே, "வரும்போது அவர் என் நண்பர் கணேசனாக வந்தார். இப்போது கதையில் உள்ள ஜமீன்தாராக மாறி இருக்கிறார். அதனால் தான் அவருக்கு ஜமீன் தோரணை வந்து இருக்கிறது” என்றாராம். மேலும் இந்த மாற்றத்தால் தான் அவரை நடிகர் திலகம் என்கின்றனர் என மெச்சிக்கொண்டாராம்.