கல்யாணத்துலையே காசு பார்த்தவங்க… இத சும்மா செய்வாங்களா… நயனின் கேடி ப்ளான்!
வெளியில் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த நயனின் திடீர் இன்ஸ்டா எண்ட்ரியின் பின்னால் மிகப்பெரிய சூட்சமும் ஒளிந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதனால் தான் ஒரு நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் போதும் ஒரு படத்துக்கு மட்டும் ப்ரோமோஷன் செய்வதும் காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஐயா படம் மூலம் சினிமாவுக்கு வந்த நயன் முதலில் சாதாரண நாயகிகள் போல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். ஆனால் வரிசையாக சிம்பு, பிரபுதேவாவுடனான காதல்முறிவு […]
வெளியில் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த நயனின் திடீர் இன்ஸ்டா எண்ட்ரியின் பின்னால் மிகப்பெரிய சூட்சமும் ஒளிந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதனால் தான் ஒரு நேரத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் போதும் ஒரு படத்துக்கு மட்டும் ப்ரோமோஷன் செய்வதும் காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஐயா படம் மூலம் சினிமாவுக்கு வந்த நயன் முதலில் சாதாரண நாயகிகள் போல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். ஆனால் வரிசையாக சிம்பு, பிரபுதேவாவுடனான காதல்முறிவு தான் அவரை மேலும் வலுவாக்கியது. ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டு சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடித்து தன்னுடைய ரீஎண்ட்ரியை வலுவாக பதிவு செய்தார்.
இதையும் படிங்க: ‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…
அதைதொடர்ந்து துணிந்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தார். படம் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்தது. லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடையாளத்தினை தன்னுடையதாக மாற்றினார். அதனை தொடர்ந்து படத்தினை தயாரிக்க தொடங்கினார். நானும் ரவுடித்தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதில் இருந்து நயன் செய்யும் அனைத்திலையுமே லாபத்தினையே எதிர்பார்த்தார். கல்யாணத்தினை கூட நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்றார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட தலைக்காட்டாத நயன் தற்போது ஜவான் படத்திற்கு இன்ஸ்டாவில் ப்ரோமோட் செய்வது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஷங்கரையே பின்னுக்கு தள்ளிய அட்லீ! ‘ஜவான்’ படம் 300 கோடினு சொல்றதெல்லாம் பொய்யா?!..
ஆனால் அதிலும் நயன் ஒரு ஸ்கெட்ச் வைத்திருக்கிறாராம். அதாவது சம்பளத்தினை விட ஒரு தனித்தொகை கொடுக்க வேண்டும் எனக் கேட்டாராம். அதற்கு ஜவான் படக்குழுவும் ஒகே சொல்ல அம்மணி பல கோடியை வாங்கி கொண்டே ட்ரைலரை தன்னுடைய இன்ஸ்டாவில் களமிறக்கி இருக்கிறார்.
அதே நேரத்தில் சல்லி பைசா கொடுக்காத இறைவன் திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்ட போதும் அந்த பக்கம் கூட நயன் திரும்பவே இல்லையாம். 28ந் தேதி இறைவன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்போது வரை அவர் இன்ஸ்டாவில் இருந்து ஒரு போஸ்ட் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.