காவாலா பாட்டுல இத நீ தான பண்ண… நெல்சனை கலாய்த்த ரெட்டின் கிங்ஸ்லி..!
ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சனின் பேட்டி தான் சமூக வலைத்தளம் முழுவதும் நிரம்பி இருக்கிறது. அதிலும் கவலையுடன் கிங்ஸ்லியுடன் ஒரு விருது விழாவில் நடந்து சென்ற நெல்சனுக்காகவே ஜெய்லர் ஓட வேண்டும் என நினைத்தவர்கள் தான் அதிகம்.
அப்படி ஆசைப்பட்டதுக்கு ஏற்ப ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ரஜினியை வேறு கோணத்தில் காட்டியதற்கே நெல்சன் அப்ளாஸ் வாங்கினார். கஷ்ட நேரத்திலும் தன்னுடன் இருந்த ரெடின் கிங்ஸ்லியுடன் முகம் முழுக்க புன்னகையுடன் அவர் பேசி இருக்கும் ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போயிடுவ!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் அமலாபால்!…
அந்த பேட்டியில், ரோல்ஸ் ராய்ஸ் கார் வெளியில் நிற்பதாக கேள்விப்பட்டேன் என ரெடின் கேட்கிறார். அதற்கு சிரித்து கொண்டே நெல்சன் ஆமா நானும் கேள்விப்பட்டேன் என்கிறார். சரி காரை எடு ஈசிஆரிலு ட்ரிப் போலாம் என்கிறார். சரி சுத்திட்டு அவங்க ஆபிஸுல விட்றலாம் என நெல்சன் கூற அப்போ எதும் கிடையாதாப்பா எனச் சிரித்து கொண்டே கேட்கிறார்.
எல்லாருக்கும் டிவி மட்டும் வாங்கி தரதா சொல்லிருக்காங்க என கிங்ஸ்லியிடம் கூறுகிறார். 400 கோடிலாம் வசூல் இல்லப்பா. 375 கோடி தான் என இருவரும் மாறி மாறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். நான்கு படத்தில இது பெரிய படம் எங்களுக்கு நீ என்ன செய்ய போற என நெல்சனை ரெடின் கேட்கிறார்.
வேணா முத்தம் தரேன். வாங்கிக்கோங்க எல்லாம் ஒன்னு என நக்கலாக பேசுகிறார். அதிலும் ரெடின் எல்லா படத்திலையும் வந்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது என நினைத்தேன். ஆனால் இவருக்கே எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இதனால் தான் காட்டியும் காட்டாமல் இருந்தேன் என்றார் நெல்சன்.
இதையும் படிங்க: காரி துப்ப போறேன்.. அனகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. ரிது வர்மாவிடம் நடிகர் விஷால் ஆபாச பேச்சு!
ஆனால் ரெடின் அசராமல் அவர் டான்ஸ் மட்டும் தான் சொல்லுவார். நீ தான மத்ததையெல்லாம் செய்வ எனக் காமெடி செய்து இருந்தார். ஒரு டைமில ஒருத்தர் தான் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விடிவி கணேஷையும், உங்களையும் இணைந்து நடிக்க விடவில்லை என்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.