அவங்க சும்மா இருந்தாங்க!... பேட்டி கொடுத்து மறுபடியும் அசிங்கப்படும் நிக்சன்… கழுவி ஊத்திட்டு இருக்காங்கப்பா

by Akhilan |
அவங்க சும்மா இருந்தாங்க!... பேட்டி கொடுத்து மறுபடியும் அசிங்கப்படும் நிக்சன்… கழுவி ஊத்திட்டு இருக்காங்கப்பா
X

Nixen: பிக்பாஸ் தமிழ் 7ல் ரசிகர்களே ஒரு டீமாக மாறினார்கள் என்று கூட சொல்லலாம் புல்லி கேங்கை கழுவி ஊற்றுவதையே ஒரு வாடிக்கையாக வைத்து இருந்தனர். அதற்கு பெரிய கேப் கொடுத்து இருந்த நிலையில் மீண்டும் வெற்றிகரமாக துவங்கி வைத்துவிட்டார் நிக்சன்.

பிக்பாஸ் தமிழ் 7 பைனல் முடிந்து அர்ச்சனா கப்பை தட்டி சென்றார். அவர் இருந்த பி டீம்மான தினேஷ், விஷ்ணு, மணி என அனைவரும் வரிசையாக வந்து பேட்டி கொடுத்துவிட்டனர். பிரதீப் குறித்து கேட்ட போது ரெட் கார்ட் தூக்கிய விஷ்ணு, மணியே புரியாமல் செய்த நிகழ்வாகவே அதை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இருக்க இடத்தை விட்ர கூடாது!… முடிவில் இருந்து பின்வாங்கிய விஜய்.. இதுதான் புது திட்டமாம்!…

தினேஷ் மற்றும் அர்ச்சனா, பிரதீப் குறித்து பெருமையாக பேசி இருந்தனர். புல்லி கேங்கை சேர்ந்த மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன் இதுவரை எந்த பேட்டியும் கொடுக்காமலே இருந்து வந்தனர். ரசிகர்களும் எப்போடா இவங்க வாயை திறப்பாங்க என காத்துக்கொண்டே இருந்தனர். அதற்கேற்ப நேற்று வகையாக வந்து சிக்கினார் நிக்சன். விஜய் தொலைக்காட்சி லைவில் பேசிவிட்டு தனியார் பேட்டியில் கலந்து கொண்டார் நிக்சன்.

கிட்டத்தட்ட அவர் வெளியேறி ஒரு மாதம் கழித்து பேட்டிக்கு வந்திருக்கும் அவர் சில கேள்விகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் வாண்டட்டா பிரதீப் குறித்து பேசுகிறேன் என்ற பெயரில் சிலதை பேசி மீண்டும் ட்ரோல் மெட்டிரியலாக மாறி இருக்கிறார். அதிலும் எக்ஸ் தளத்தில் நிக்சன் மீண்டும் ட்ரெண்ட்டாகி வருகிறார்.

இதையும் படிங்க: இப்பதான் ராகவா லாரன்ஸ்!. 80களில் உறைய வைக்கும் பேய் படங்களில் கலக்கிய நிழல்கள் ரவி..

அவர் பேட்டியில் சொன்ன காரணத்துக்கு மாறாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் விஷயத்துக்காக நான் தூக்க போறேன் என விஷயத்தையே மடைமாற்றி விட்டது நிக்சன் தான் என பல ஆதரங்களை ரசிகர்கள் இறக்கி வருகின்றனர். அதே நேரத்தில் நிக்சன் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாகவும் சில கமெண்ட்களை போட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

சிலர் நிக்சன் தப்பை செய்தாகிவிட்டது. மக்களிடம் அதை நேரடியாக மன்னிப்பாக கேட்டுவிட்டாலே மறந்துவிடுவார்கள். ஹீரோயிசம் காட்டுகின்றேன் என தேவையில்லாமல் பிரச்னையை வளர்க்க வேண்டாம் எனவும் சிலர் அறிவுரை கொடுத்து வருகின்றனர். மேலும், இவருக்கே இப்படி என்றால் மாயா, பூர்ணிமா நிலை கஷ்டம் தான் என்றும் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: அம்மா இருக்கிற வரைக்கும் நல்லா இருந்தா.. பவதாரிணி குறித்து சகோதரி பரபரப்பு பேட்டி

Next Story