ரிலீஸுக்கு தயாராகும் குபேரா… ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!
Kubera: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா படத்தின் ஓடிடி உரிமையை போட்டிகளுக்கு இடையே பிரபல நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் மிகப்பெரிய திரைப்படமான 'குபேரா', பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப், தலிப் தாஹில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழில் உட்பட, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மும்பை தராவி சுரங்கப் பகுதியில் நடக்கும் சமூகநீதிக் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள குப்பைத் தொட்டி அருகே 12 மணி நேரம் வரை முககவசமின்றி நடித்து, ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் தனுஷ். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தனுஷ் தெலுங்கில் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். இது அவரது முதல் தெலுங்குப் பாடல் என்பதால், ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தனுஷின் திரையுலகப் பயணத்தின் 23வது ஆண்டு இப்படத்துடன் நிறைவேறும். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘தேவா’ என வைக்கப்பட்டுள்ளது. முன்பு காதல் கதைகளில் மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் சேகர் கம்முலா, ‘குபேரா’ மூலம் சமூக கதையின் அடிப்படையிலான த்ரில்லர் ஜானரில் முதன்முறையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தினை வாங்க பிரபல நிறுவனங்களுக்கு இடையே பெரிய போட்டி இருந்தது. இந்நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் 50 கோடி கொடுத்து குபேரா படத்தினை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.