OTT: தமிழில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள்… லிஸ்ட் நல்லா இருக்குப்பா!

By :  AKHILAN
Published On 2025-05-15 13:30 IST   |   Updated On 2025-05-15 13:30:00 IST

OTT: தமிழ் ரசிகர்களிடம் பெரிய டைம் பாஸாக அமையும் ஓடிடி ரிலீஸின் இந்த வார அப்டேட் வெளியாகி இருக்கிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் அவரே நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். வடிவேலு, கேத்ரீன் தெரசா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். காமெடியாக கொள்ளை சம்பவத்தினை மையமாக வைத்து வெளியான இப்படம் சுமார் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. காதலை மையமாக வைத்து முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் நேசிப்பாயா. இப்படம் பெரிய அளவு வரவேற்பு பெறாத நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. 

 

வாரா வாரம் ஒரு படம் என்ற ரீதியில் பேசில் ஜோசப்பின் இந்த வார ரிலீஸாக அமைந்துள்ளது மரண மாஸ் திரைப்படம். சீரியல் கில்லர் கதையையும் இப்படி கூட சொல்லலாம என்ற ரீதியில் மலையாள சினிமாவிற்கே உரிய வித்தியாசமான திரைப்படம். சோனி லைவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

கன்னட திரைப்படமான வாமன பிரைமில் ரிலீஸாக இருக்கிறது. ஆங்கில திரைப்படமான வுல்ஃப் மேன் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. நெட்பிளிக்ஸில் ஆங்கில வெப் சீரிஸான பெட் ரிலீஸாகி இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் ஹெய்ஜுனோன், பிராங்க்ளின், டேஸ்பிலியூவர்ஸ் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

Tags:    

Similar News