OTT Watch: பக்கா திரில்லரான சீரிஸ்… பதை பதைக்கும் சம்பவங்கள்… எப்படி இருக்கு ஹரிகதா சம்பாவாமி யுகே யுகே

By :  AKHILAN
Update: 2025-05-14 10:39 GMT

OTT Watch: கடந்த பல ஆண்டுகளாகவே வெப் சீரிஸ்கள் தமிழ் ரசிகர்களுக்கு சரியான டைம் பாஸாக அமைந்து உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஹாட்ஸ்டாரில் இருக்கும் ஹரிகதா சம்பாவாமி யுகே யுகே. வெப் சீரிஸின் மைனஸ் மற்றும் பிளஸ் பேசும் திரை விமர்சனம்.

தெலுங்கில் உருவான இந்த வெப் சீரிஸ் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. மேகி என்ற இயக்குனர் இயக்கத்தில் ராஜேந்திர பிரசாத், ஸ்ரீகாந்த், திவி வைத்யா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். 

 

6 எபிசோட்களை கொண்ட இந்த சீரிஸ் 1980-90 களில் அரக்கு என்ற பழங்குடி கிராமத்தில் நடக்கும் கதை. ஹரி என்கிற ஒரு பையன் கொடூரமா கொலை பண்ணிட்டு சிறைக்கு செல்கிறான். அதை தொடர்ந்து கிராமத்தில் கொடூரமாக கடவுளின் அவதாரங்களை வைத்து ஒரு சில கொலைகளும் நடக்கிறது.

இந்த விசாரணை சமயத்தில் ஒரு பிரச்சனையில் தன் மனைவியை இழந்துட்டு தன் மகளுடன் முன்னாள் போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த் அதே கிராமத்துக்கு வந்து சேர்கிறார். பின்னர் அவர் விசாரணையில் இறங்கி இதை எல்லாம் செஞ்சது யாரு கடவுளா ? மனிதனா? அதற்குரிய காரணம் என்ன என்பதே கதை.

6 எபிசோடுகள் என்பது கம்மியா இருப்பதால் திரில்லராக இருக்கும் என்ற ஆசையை தகர்த்து விடுகிறது. ஒரு சில குறைகள் இருந்தாலும் முதல் 3 எபிசோடு மட்டுமே நல்லாவே போகிறது. ஆனால் 4வது எபிசோடிலேயே எதனால் நடந்தது யார் காரணம் என்ற உண்மைகள் உடைந்து விடுகிறது. 

 

அதை தொடர்ந்து மற்ற எபிசோட்கள் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்காமல் மோசம் செய்து விடுகிறது. கதையில் வித்தியாசம் இருந்தாலும் திரைக்கதையில் நிறைய லாஜிக் பிரச்சனைகள் இருப்பதால் வெறுப்பை தருகிறது.

சீரிஸ் நிறைய ரொம்ப ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்காதீங்க. கிளைமேக்ஸ் தான் மிகப்பெரிய சொதப்பல். இருந்தும் திரில்லரான வெப்சிரீஸ்களின் ரசிகர்களாக இருந்தால் ஒரு டைம் பாஸுக்காக பார்க்கலாம்.

Tags:    

Similar News