வீக் எண்ட்டில் பட்டைய கிளப்பும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்… இந்த படமும் இருக்கா?
Hotstar: தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நீங்க மிஸ் பண்ணவே கூடாதா ஐந்து படங்களையும் சுவாரசிய அப்டேட்.
சைரன்: ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் வெளியான திரைப்படம் ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கொலை வழக்கில் சிக்கிய வித்தியாசமான கதையை மையமாக வைத்திருக்கும். நிறைய ட்விஸ்ட்டுகள் இல்லையென்றாலும் வீக் எண்ட்டுக்கு பக்கா வைப் தான்.
பீட்சா: கார்த்திக் சுப்புராஜ் அறிமுக திரைப்படமான திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். திரில்லர் ஜானரில் தொடங்கப்படும் இத்திரைப்படம் கடைசியில் வித்தியாசமான ட்விஸ்டுடன் அமைந்திருக்கும்.
இப்படம் தான் விஜய் சேதுபதியின் கோலிவுட்டில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அது போல கார்த்திக் சுப்புராஜின் தொடக்கத்திற்கும் பலமாக இருந்தது இத்திரைப்படம் தான்.
ரங்கஸ்தலம்: ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தமிழ் இல்லாமல் இந்த வார இறுதியில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை பார்க்க வேண்டும் என்றால் ரங்கஸ்தலம் தான் உங்களுக்கு சிறந்த வாய்ப்பு.
ஏற்கனவே கேம் சேஞ்சர் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும் நேரத்தில் ரங்கஸ்தலத்தினை ஒத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதனால, கேம்சேஞ்சருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு விசிட்டை போடுங்க.
விஸ்வரூபம்: கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான திரைப்படத்தை எந்த சினிமா ரசிகர்களும் மறந்துவிட முடியாது. தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை ரசிகர்களுக்கு பரப்பரப்பை கொடுக்கும் இத்திரைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் அது ரொம்பவே தவறான விஷயம். இந்த வார இறுதியில் உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு விஸ்வரூபமாக கூட இருக்கலாம்.
ஜிகர்தாண்டா: கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு சூப்பர் படைப்பான ஜிகர்தண்டா பாபி சிம்ஹாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய இடம் பிடித்தது. சித்தார்த் மற்றும் லட்சுமிமேனன் திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தனர். இந்த நூற்றாண்டின் சிறந்த 100 படைப்புகள் பிரபல சேனல் வெளியிட்ட பட்டியலில் ஜிகர்தண்டாவிற்கும் இடம் கிடைத்ததும் என்பது தான் முக்கியமான விஷயம்.