நெட்பிளிக்ஸில் மிஸ் பண்ணக் கூடாத டாப் 5 கிரைம் திரில்லர் படங்கள்... நோட் பண்ணுங்கப்பா...
Netflix: தற்போது ஓடிடி மயம் தான் எங்கும் இருக்கிறது. கேபிள் கனெக்சனை விட ஆண்ட்ராய்டு டிவிகளில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனை தான் பலர் அதிகமாக விரும்புகின்றனர். அந்த வகையில், உங்களிடம் நெட்பிளிக்ஸ் இருந்தால் நீங்க மிஸ் பண்ணவே கூடாத ஐந்து சூப்பர் ஹிட் திரில்லர் திரைப்படங்களின் தொகுப்புகள்.
இரட்ட: மலையாளத்தில் அறிமுக இயக்குனரான என்ஜி கிருஷ்ணன் எழுதியிருக்கும் திரைப்படம் இரட்ட. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் வாகாமன் காவல் நிலையம் அலங்கரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் துப்பாகி சத்தம் கேட்க எல்லாரும் வந்து பார்க்கும் ஏஎஸ்ஐ ஜோஜூ ஜார்ஜ் இரத்த வெள்ளத்தில் இறந்து இருக்கிறார்.
இந்த கேஸை விசாரிக்க அவருடைய இரட்டை சகோதரரான டிஎஸ்பி கேரக்டரில் ஜோஜூ ஜார்ஜ் வருகிறார். யார் கொலை செய்தார்? அண்ணன் தம்பிகளுக்குள் என்ன பிரச்சனை? இந்த கொலை எப்படி நடந்தது என எங்கும் பிசிறு இல்லாமல் தரமான கிளைமாக்ஸ் உடன் படம் முடிவது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.
ஜன கன மன: ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன், மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம். கொலை செய்யப்படும் பேராசிரியர், அவருடைய இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடும் கல்லூரி மாணவர்கள்.
இந்த கேஸில் மாணவர்களுக்காக வாதாட பிரித்திவிராஜ். என்ன செய்தார்? எப்படி அவர்களை வெல்ல வைத்தார் என்பதை ஓவர் ரொமான்டிக்காக இல்லாமல் திரில்லராக சொல்லியிருக்கும் திரைப்படம்.
விசாரணை: வெற்றிமாறன் இயக்கத்தில் முக்கிய படைப்பாக அமைந்தது திரைப்படம். செய்யப்படாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு அப்பாவிகளை போலீசார் கொடுமைப்படுத்தி அதை ஒப்புக்கொள்ள வைக்க சொல்லும் கொடுமையான நிகழ்வை தன்னுடைய ஸ்டைலில் எழுதி இருக்கிறார் வெற்றிமாறன். மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்ற திரைப்படம் ஒவ்வொரு ரசிகரும் மிஸ் பண்ண கூடாத லிஸ்டில் ஒன்று.
ஃபாரன்சிக்: அறிமுக இயக்குனர்களான அகில் பவுல் மற்றும் அனஸ்கான் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் டொமினோதமஸ் மற்றும் மம்தா மோகன்தாஸ் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். தொடர்ச்சியாக நடந்து வரும் கொலை குற்றங்களுக்கு காரணம் யார் என பாரன்சிக் நிபுணரான டோவினோ தாமஸ் விசாரணையில் இறங்க அவருக்கு கிடைக்கும் அதிர்ச்சியான தகவல் நம்மையும் அதிரவைக்கிறது.
சிபிஐ 5: தி பிரைன்: கே. மது இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்து இருக்கிறார். சிபிஐ சீரிஸில் ஐந்தாவது படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உள்துறை அமைச்சர் தொடங்கி தொடர்ச்சியாக இறந்து போகும் முக்கிய பிரபலங்கள் விசாரிக்க வரும் சிபிஐ டீம். நொடி நேரம் கூட அலுப்பு கொடுக்காத இந்த படத்தையும் மிஸ் பண்ணவே கூடாது.