தியேட்டரே பத்திக்கிச்சு.. அதுல அடுத்த ஆட்டமா? புஷ்பா2 ஓடிடி ரிலீஸ் அப்டேட்…
புஷ்பா2 படத்தின் ஓடிடி ரிலீஸ்
Pushpa2: தென்னிந்திய சினிமாவில் மைல்கல் வெற்றியை பெற்றிருக்கும் புஷ்பா2 திரைப்படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் கேட்டதும் சம்மதித்த இளையராஜா... ஆனா கவிஞர் என்ன இப்படி இருக்காரு?
புஷ்பா திரைப்படம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது புஷ்பா திரைப்படம். முதல் பாகத்தின் வரவேற்பு தொடர்ந்து இரண்டாம் பாகம் சில ஆண்டுகள் கழித்து சமீபத்தில் வெளியானது.
ஆனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு அதீத பரவியது கிடைத்திருக்கிறது. வெளியாகி 15 நாட்களுக்கும் மேலாக ஆகி இருக்கும் நிலையில் தென்னிந்திய சினிமாக்களின் பல வெற்றி படங்களின் சாதனைகளை புஷ்பா 2 முறியடித்து இருக்கிறது.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் பலமொழி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு செய்திருந்தார்.
ஆனால் படக்குழு உடன் ஏற்பட்ட திடீர் மோதலில் அவர் கடைசி நேரத்தில் படத்திலிருந்து வெளியேறி இருந்தார். அவருக்கு பதில் பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் படத்தின் பின்னணி இசையை இசையமைப்பு செய்திருந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களிடம் எல்லா காட்சிகளும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் புஷ்பா 2 வெளியாகி ஆறே நாட்களில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. இது மட்டுமல்லாமல் இப்படத்தின் ரிலீஸ் முந்திய வசூலே ஆயிரம் கோடியை தாண்டியதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் டாப் ஹிட் திரைப்படங்களான பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் வசூலை புஷ்பா முறியடித்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்து இருக்கும் நிலையில் படத்தின் திரையரங்க காட்சிகள் இதற்கு மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழு அடுத்த கட்டமாக ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
புஷ்பா இரண்டாம் பாகத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை 275 கோடிக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது. இந்நிலையில்
இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஜனவரி 9 எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.