OTT Review: இந்த வார இறுதியில் மிஸ் பண்ணக்கூடாத திரைப்படம் போட்…

போட் படத்தின் சுவாரஸ்ய விஷயங்களின் தொகுப்பு

By :  Akhilan
Update: 2024-10-05 10:15 GMT

Boat: வார இறுதியில் ஓடிடியில் நிறைய மொழி திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் எந்த படத்தை பார்க்கலாம் என குழம்பி நின்றால் இந்த தொகுப்பு உங்களுக்கு தான்.

ஓடிடியில் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது யோகி பாபு நடிப்பில் வெளியான போட். இப்படத்தை இயக்குனர் சிம்பு தேவன் இயக்கி இருக்கிறார். இப்படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது.

1943ம் ஆண்டு நடக்கும் ஜப்பான் மற்றும் சென்னை மாகாணத்திற்கு இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மீனவராக யோகி பாபு நடித்திருக்கிறார். மேலும் பல முக்கிய வேடத்தில் கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லைப் ஆஃப் பை என்னும் ஆங்கில படத்தை போல நடுக்கடல் மட்டுமே இப்படத்தின் முழு படைப்பாக அமைந்திருக்கிறது. ஆனால் இங்கு நிறைய கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். வழக்கம் போல யோகி பாபு தன்னுடைய காமெடிகளால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

படகில் நடக்கும் கதை என்பதால் வசனங்கள் மூலம் மட்டுமே ரசிகர்களை கட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிப்ரானின் இசை பெரிய அளவில் உதவுவதில்லை. ஆனால் 10 கேரக்டர்களுமே பெரிய அளவில் தங்களுடைய பங்கை செய்துள்ளனர்.

வித்தியாசமான படைப்பு எனக் கூற முடியாவிட்டாலும் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக சில மணி நேரம் ரசிகர்களை பார்க்க வைக்கும் படியாக அமைந்திருக்கிறது. யோகி பாபுவின் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக வார இறுதி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News