பார்த்திபனால் நின்று போன ரஜினி படம்!.. யார் சொல்லியும் கேட்காத நக்கல் நாயகன்....

by சிவா |
parthiban
X

பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஆர்.பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக மாறினார். ரஜினி, கமல் உள்ளிட்ட சில ஹீரோக்கள் அந்த கதையில் நடிக்க முன் வராரதால் அவரே ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

parthiban

அதன்பின் பல படங்களை அவர் இயக்கினார். தமிழ் சினிமாவில் வித்தியாசமாக கதைகளை உருவாக்கி இயக்கும் இயக்குனர் இவர். குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு, இரவின் நிழல் என புதுப்புது முயற்சிகளை செய்தவர். இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.

இதையும் படிங்க: பொன்னம்பலமாவது ஆனந்த்ராஜாவது! இனிமேல் இவர்தான் – பேன் இந்தியா வில்லனாக மாறிய விஜய்சேதுபதி

சுகமான சுமைகள் எனும் படத்தை இயக்கி நஷ்டமடைந்த பார்த்திபன் ஜெயித்து காட்டுகிறேன் என சொல்லி அடித்த படம் உள்ளே வெளியே. இப்படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

ulle

இந்த படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா ஏவிஎம் தயாரிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த எஜமான் படத்திலும் நடித்து வந்தார். ஒரு நடிகை ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும்போது கண்டிப்பாக கால்ஷீட் பிரச்சனை ஏற்படும். உள்ளே வெளியே படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, எஜமான் படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை 2 நாட்கள் அனுப்புமாறு ஆர்.வி.உதயகுமார் தரப்பில் பார்த்திபனிடம் கேட்கப்பட்டது.

yejaman

ஆனால், மிகுந்த பண நெருக்கடிக்கு இடையே பார்த்திபன் அப்படத்தை எடுத்து வந்தார். ஐஸ்வர்யாவை அனுப்பினால் ஒருநாள் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என நினைத்து அதற்கு அவர் சம்மதிக்கவில்லையாம். இதனால் எஜமான் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. யார் யாரோ கேட்டும் பார்த்திபன் மறுத்துவிட்டாராம். அதன்பின் ஏவிஎம் சரவணனே பார்த்திபனை தொடர்பு கொண்டு பேச அதற்கு சம்மதித்த பார்த்திபன் ஒருநாள் மட்டும் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தாராம்.

இதையும் படிங்க: சும்மா இருந்த விஜய்சேதுபதியை உசுப்பிவிட்டதே ரஜினிதானா? அன்னைக்கு அஜித் – இன்னைக்கு இவரா?

Next Story