கூட்டிட்டு வந்து என்னை அசிங்கப்படுத்திட்டாரு.. கதறும் தேசிய விருது இயக்குனர்....பாவம் மனுஷன்...!
அரசியல் என்றாலே பிரச்சனை தானே? பிரச்சனை இல்லாத அரசியல் எங்கு உள்ளது? அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலால் இயக்குனர் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த ஆர்கே செல்வமணி வெற்றி பெற்று மீண்டும் பதவியை பிடித்து விட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் பாக்யராஜின் அணி தோல்வி அடைந்தது. அந்த வகையில் பாக்யராஜ் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பார்த்திபனும் தோல்வி […]
அரசியல் என்றாலே பிரச்சனை தானே? பிரச்சனை இல்லாத அரசியல் எங்கு உள்ளது? அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலால் இயக்குனர் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த ஆர்கே செல்வமணி வெற்றி பெற்று மீண்டும் பதவியை பிடித்து விட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் பாக்யராஜின் அணி தோல்வி அடைந்தது. அந்த வகையில் பாக்யராஜ் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பார்த்திபனும் தோல்வி அடைந்தார். இவர் பாக்யராஜின் சிஷ்யன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பேசியுள்ள இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, "எனக்கு இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமே இல்லை. எனது குருநாதர் பாக்யராஜ் கூறியதால் மட்டுமே போட்டியிட்டேன். இதற்காக வாக்குகளை கூட நான் யாரிடமும் கேட்கவில்லை" என மிகவும் வேதனையுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாத்துமா காத்துல மானம் போயிட போகுது!.. குட்டை கவுனில் சூடேத்திய நடிகை….
தேசிய விருது வென்று ஒரு சக்ஸஸ் இயக்குனராக சாதனை புரிந்து கொண்டிருக்கும் என்னை கூட்டி வந்து தேர்தலில் இழுத்து விட்டு பாக்யராஜ் அசிங்கப்படுத்தி விட்டார் என்பதாகவே பார்த்திபனின் இந்த மனக்குமுறல் உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பார்த்திபன் யாரையும் நேரடியாக குறிப்பிட்டு கூறவில்லை.
இருப்பினும் மறைமுகமாக தன்னை தான் கூறுகிறாரோ என்று எண்ணிய பாக்யராஜ் இதுகுறித்து, "என்னமோ நான் தான் பார்த்திபனுக்கு அதிக பிரஷர் கொடுத்தும், நச்சரித்தும், வற்புறுத்தியும் தேர்தலில் நிற்க வைத்தது போல் அவர் போட்டிருக்கும் பதிவுகள் சித்தரிக்கின்றன. மேலும் அதனை தொடர்ந்து எழும் விமர்சனங்களும் என்னை வெகுவாக காயப்படுத்துகின்றன" என கூறி பதிலுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் குரு சிஷ்யன் இடையே பனிபோர் தொடங்கி விட்டது. இந்த மனக்கசப்பு எப்போது நீங்கும் என்று தெரியவில்லை.