டிரைலரை பாக்கும்போதே தூக்கம் வருதே… மணிரத்னத்தை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்…
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. சாதித்து காட்டிய மணிரத்னம் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை எம்.ஜி.ஆர், மனோபாலா, கமல்ஹாசன் என பலரும் படமாக்குவதற்கு முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சிகள் கைக்கொடுக்கவில்லை. அதன் பின் பல வருடங்கள் கழித்து மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்கத் திட்டமிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு […]
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது.
சாதித்து காட்டிய மணிரத்னம்
கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை எம்.ஜி.ஆர், மனோபாலா, கமல்ஹாசன் என பலரும் படமாக்குவதற்கு முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சிகள் கைக்கொடுக்கவில்லை. அதன் பின் பல வருடங்கள் கழித்து மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்கத் திட்டமிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. எனினும் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி வெற்றிகரமாக முடிவடைந்தது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்தாலும் நாவலை படிக்காதவர்களை இத்திரைப்படம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றே விமர்சனங்கள் எழுந்தன. பல காட்சிகள் மனதுக்கு ஒட்டவில்லை என்று பல ரசிகர்கள் கூறினார்கள்.
டிரைலரை பாக்கும்போதே தூக்கம் வருது…
இந்த நிலையில் நேற்று “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இரவு 9 மணிக்கு டிரைலர் வெளிவருவதாக தகவல் வெளிவந்த நிலையில் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் 10 மணிவாக்கில்தான் டிரைலர் வெளிவந்தது.
இரண்டாம் பாகத்திற்கான டிரைலரை பார்த்த பலரும் டிரைலர் நன்றாக இருக்கிறது என கூறினாலும், சிலரை டிரைலர் அவ்வளவாக கவரவில்லை. டிரைலர் 3 நிமிடங்கள் ஓடக்கூடியதாக அமைந்திருந்தது. இணையத்தில் பலரும் “டிரைலரை பாக்கும்போதே தூக்கம் வருது. படம் எப்படி இருக்குமோ” என பேசத்தொடங்கிவிட்டனர். இவ்வாறு இணையத்தில் பலரும் டிரைலரை கேலி செய்யத்தொடங்கிவிட்டனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.