நீங்க நடத்துவீங்க லீலைகளை! ஆனால் பசங்கனு வரும் போது குத்துதா? என்ன க்ளவரா பேசுறாரு நம்ம மாஸ்டர்?
Actor PrabhuDeva: சினிமாவில் ஒரு நடிகராக, இயக்குனராக , நடன அமைப்பாளராக என ஒரு மாபெரும் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வரும் நடிகர் தான் பிரபு தேவா. இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இவர் நடனமாடியுள்ளார். மின்சார கனவு என்ற படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரபு தேவா பெற்றார்.
இதையும் படிங்க: ஐசு செயலால் கடுப்பில் இருக்கும் அமீர்..! அமீர் மீது கோபமாகி அன்பாலோ செய்த ஐசு குடும்பம்..! என்னங்கடா..!
முதன் முதலில் இந்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா அந்தப் படத்தில் ரோஜாவுக்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற முன்னணி நடிகர்களுக்காகவும் பல பாடல்களில் நடனம் அமைத்திருக்கிறார். சினிமா வாழ்க்கை இவருக்கு பெரும் புகழையும் பேரையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் ஏராளமான சிக்கல்களை சந்தித்தார் பிரபுதேவா.
இதையும் படிங்க: தளபதியை சொல்றாங்க… சூப்பர்ஸ்டார் பட்டத்தையே இவரிடம் தான் ரஜினி ஆட்டைய போட்டாராம்..!
முதலில் ரம்லாத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உண்டு.அதில் முதல் மகன் புற்று நோயால் இறந்து போனாராம். அதனை அடுத்து நயன் தாராவுடன் சில காலம் இருந்தார் பிரபுதேவா.
ஒரு கட்டத்தில் நயன் பிரபு தேவாவை விட்டு பிரிந்துபோக ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தன் அளவுக்கு வளர்ந்திருக்கும் மகன்களின் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? அப்படி இருந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு,
இதையும் படிங்க: லால் சலாம் படத்துக்கு வேட்டு.. சொந்த காசில் சூனியம் வைத்த ஐஸ்வர்யா… இதெல்லாம் தேவையா?!..
அதை இப்பொழுதெல்லாம் சொல்ல முடியாது . அந்த நேரத்தில் என மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதன் படிதான் நடக்கும் என்று பிரபுதேவா கூறீனார்.