தளபதியை சொல்றாங்க… சூப்பர்ஸ்டார் பட்டத்தையே இவரிடம் தான் ரஜினி ஆட்டைய போட்டாராம்..!

SuperStar: தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்னையில் சமீபகாலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் சூப்பர்ஸ்டார். அந்த பட்டத்தினை ரஜினியிடம் இருந்து விஜய் பிடுங்குகிறார் எனப் பேசப்பட்டது. ஆனால் ரஜினியே ஒருத்தரிடம் இருந்து தான் பிடுங்கினார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜயை முன்நிறுத்தி அடுத்த சூப்பர்ஸ்டார் இவர் தான் என சரத்குமார் பேசியது சர்ச்சையானது. தொடர்ச்சியாக பலரும் விஜயிற்கு சப்போர்ட் செய்ய அந்த நேரத்தில் ரிலீஸாக இருந்த ஜெய்லர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினி மறைமுகமாக அதற்கு பதிலளித்தார்.

இதையும் படிங்க: தங்கலான் முதல் தளபதி 68 வரை!.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்!. ரிலீஸ் எப்போது தெரியுமா?

படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டும் கொடுத்தது. இதையடுத்து லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் என்ன செய்வார் என ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் சமீபத்தில் நடந்த சக்ஸஸ் விழாவில் ஒரே சூப்பர்ஸ்டார் தான் என விஜய் பேசி இருந்தால் கூட சில இடங்களில் தான் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுவது தப்பில்லை என்பது போலவே பேசி இருப்பார். இதனால் இந்த சர்ச்சை தொடர்ந்து வலுத்து தான் வருகிறது.

இதையும் படிங்க: தங்கத்தில் விளையாடிய ஹரோல்ட் தாஸ்.. மகள் நிச்சயத்தார்த்த விழாவில் நடந்த ஆச்சரியங்கள்..!

சிலர் விஜய் தளபதி பட்டத்தினையே பலரிடத்தில் பிடிங்கி வைத்து இருக்கிறார். முதலில் இளையதளபதி பட்டம் நடிகர் சரவணனுக்கு கொடுக்கப்பட்டது. அடுத்து அரசியலில் ஒரு தளபதி இருக்கும் போது விஜயை ஏன் அப்படி கூப்பிட வேண்டும். இப்படி விஜயின் பட்டங்கள் எல்லாமே விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் முதன்முதலில் கமல்ஹாசனுக்கு தான் சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1978ம் ஆண்டு இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் போஸ்டரில் சூப்பர்ஸ்டார் என கமலை தான் மையப்படுத்தி இருந்தனர். அதில் ரஜினிகாந்தும் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போ அந்த பட்டத்தினை ரஜினி தானே பறித்தார் என்ற பேச்சுகளும் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

 

Related Articles

Next Story