ஒட்டுமொத்த பிக்பாஸ் வீட்டையும் காலி பண்ண நினைக்கும் பிரதீப்! இறங்கி வேலையை காட்டும் சம்பவம்
BissBoss Season 7: தமிழ் ரசிகர்களின் பொழுதுபோக்கு மற்றும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கபடுவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் இருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நிறைவடைந்திருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் புதியதாக 5 போட்டியாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: விஜய் , அஜித்தை இனிமே அப்படி பாக்கவே முடியாது! தற்கொலைக்குச் சமம் – பகீர் கிளப்பிய பிரபலம்
அவர்கள் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் வைல்கார்டு போட்டியாளர்களை பார்த்து கொஞ்சம் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். வந்ததும் அந்த 5 வைல்கார்டு போட்டியாளர்களை சின்ன பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டனர். கல்லூரியில் நடக்கும் ரேக்கிங் போல அவர்களை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் நக்கலடித்தும் கிண்டலடித்தும் வருகிறார்கள்.
இது ஒரு கட்டத்தில் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் நேற்று நடந்த டாஸ்க்கில் பிரதீப்பிற்கும் கூல் சுரேஷுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதில் கூல் சுரேஷை பிரதீப் கடுமையான தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். அதுமட்டுமில்லாமல் கமல் சாரே வந்து சொன்னாலும் நான் சாரி கேட்க மாட்டேன் என்றும் பிடிவாதத்தில் இருக்கிறார் பிரதீப்.
இதையும் படிங்க: உங்களுக்கு அவரு தான முக்கியம்..! எஸ்.பி.முத்துராமனிடம் முரண்டு பிடித்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்..!
கூல் சுரேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பதிலுக்கு கண்டபடி கூல் சுரேஷை பிரதீப் திட்டினார். மற்ற ஹவுஸ் மேட்ஸ் சாரி கேட்க சொல்லியும் பிரதீப் முடியாது என சொல்லிவிட்டார். மேலும் பிரதீப்பையும் மற்ற போட்டியாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் சின்ன பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சேர்ந்து பிரதீப் ‘பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் டார்கெட் செய்யப் போறேன். மணி ஏற்கனவே நாமினேஷனில் இருக்கிறான். அதனால் மற்ற போட்டியாளர்களை வச்சு செய்யப் போறேன்’ என்று பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: என்னடா யாத்திசை படத்தை எடுத்து வச்சிருக்கீங்க!.. தங்கலான் டீசர் எப்படி இருக்கு?.. சியான் தப்பிப்பாரா?..