விஜய் , அஜித்தை இனிமே அப்படி பாக்கவே முடியாது! தற்கொலைக்குச் சமம் - பகீர் கிளப்பிய பிரபலம்
Actor Vijay - Ajith: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இருவரும் சமகாலத்து நடிகர்கள். ஒன்றாக ஒரே நேரத்தில் சினிமாவிற்கு வந்து சமமான வெற்றி தோல்விகளை பார்த்து இன்று ஒருவருக்கொருவர் சளைச்சவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் முதன் முதலாக இருவரும் சேர்ந்து நடித்தவர்கள் அதன் பின் வேறெந்த படங்களிலும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கவே இல்லை. அந்த காலகட்டத்தில் இருந்தே இவர்களுக்குண்டான மார்கெட் உயரத் தொடங்கியது.
இதையும் படிங்க:என்னடா யாத்திசை படத்தை எடுத்து வச்சிருக்கீங்க!.. தங்கலான் டீசர் எப்படி இருக்கு?.. சியான் தப்பிப்பாரா?..
விஜயின் படங்கள் எந்தளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றதோ அதே அளவுக்கு அஜித்தின் படங்களும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. போக போக இருவரின் படங்களும் ஒன்றாக ஒரே நேரத்தில் மோதி சினிமாவை ஒரு பரப்பரப்பில் ஆழ்த்தியது.
கடைசியாக வெளிவந்த வாரிசு துணிவு படங்கள் எப்பேற்பட்ட ஹைப்பை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் மோதிய படமாக இந்த வாரிசு திரைப்படமும் துணிவு படமும் அமைந்தன.
இதையும் படிங்க: உலகநாயகனுக்கே இப்படி ஒரு குழப்பமா.. வேற ஒருவரை இளையராஜா என நினைத்த கமல்ஹாசன்..!
அதன் பின் இருவரையும் ஒரே படத்தில் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கலாம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டது. ஆனால் அது அஜித், விஜய் ரசிகர்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது என்ற ஒரே காரணத்திற்காக அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் இவர்களின் படங்கள் மீண்டும் க்ளாஷ் ஆக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் நடிக்கும் விடாமுயற்சியும் விஜய் நடிக்கும் தளபதி 68 படமும் ஒரே நேரத்தில் தான் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். ஏப்ரலில் இந்த இரு படங்களும் க்ளாஷ் ஆக வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் வெளியானது.
இதையும் படிங்க: தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!.. அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..
ஆனால் சித்ர லட்சுமணன் மீண்டும் அந்த ஒரு நிலைக்கு சினிமா தள்ளப்படாது என்றும் அப்படி இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் அது தயாரிப்பாளர்களின் தற்கொலைக்குச் சமம் என்றும் கூறியிருந்தார். ஏனெனில் இருவரின் படங்களும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் கண்டிப்பாக வசூலில் தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் இனி நடைபெறாது என்று கூறினார்.