உலகநாயகனுக்கே இப்படி ஒரு குழப்பமா.. வேற ஒருவரை இளையராஜா என நினைத்த கமல்ஹாசன்..!
Kamal Hassan: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்த கமல்ஹாசனுக்கே ஒரு கட்டத்தில் பெரிய குழப்பம் ஒன்று இருந்ததாம். அதாவது இசைஞானி இளையராஜாவையே தெரியாமல் வேறு ஒருவரை அவர் தான் என நினைத்து கொண்டிருந்த சம்பவமும் நடந்து இருக்கிறது.
இதை தன்னுடைய ஒரு பேட்டியிலேயே கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். அதில், நீண்டநாள் வரை, இளையராஜாவின் இயற்பெயரே அவருக்கு தெரியாதாம். முதலில் கமலுக்கு அறிமுகமானவர் கங்கை அமரன் தான். ஒரு மேடையில் அவரை காட்டி'பாவலர் பிரதர்ஸில் இருந்தவர். இவரோட அண்ணன்தான் பாவலர் வரதராஜன் எனக் கமலிடம் கேட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 5 நாள் முழுக்க மரத்தின் மேலே நின்ற விஜயகாந்த்.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் சொன்ன பகீர் தகவல்..
இதை கேட்ட கமல்ஹாசன் அன்னக்கிளிக்கு இசையமைத்த இளையராஜா கங்கை அமரன் தான் என நினைத்து கொண்டு இருக்கிறார். இதையடுத்து, ‘16 வயதினிலே’ படத்துக்கு இசையமைக்க இருந்தார். அந்தச் சமயத்தில் சென்னை ஃபிலிம் சேம்பரில் நடைபெற்ற ‘அன்னக்கிளி’ வெற்றிவிழா நிகழ்ச்சிக்கு கமல் சென்று இருக்கிறார். அப்போது மேடைக்கு இளையராஜாவை பேச அழைத்து இருக்கின்றனர்.
கமல் கங்கை அமரனை பார்த்து கொண்டு ‘ஏன் இன்னும் இவர் பேச எழாமல் உட்கார்ந்திருக்கிறார் என நினைத்தாராம். அப்போது அவர் அருகில் இருந்த மற்றோரு இளைஞர் எழுந்து செல்கிறார். அப்போது தான் கமலுக்கே புரிந்ததாம். ஓ இவர் தான் இளையராஜாவோ என்று.
இதையும் படிங்க: என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன ஒரு வார்த்தை!.. கடைசிவரை பின்பற்றிய எம்.ஜி.ஆர்…
இதையடுத்து கமல்ஹாசன் இளையராஜாவை ‘நீங்க யாருனு தெரியாதுங்க. மன்னிக்கணும்’ என்றாராம். பிறகே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி சினிமாவை கலக்கிய சம்பவமும் நடந்தது. 16 வயதினிலே படத்தின் தொடங்கிய இவர்களின் பயணம் 50 படங்களுக்கும் அதிகமாக நீண்டு இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஹிட் அடித்த படங்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.