சிவாஜிக்கு அவர் எப்படியோ கேப்டனுக்கு இவரு!.. விஜயகாந்தின் காட்ஃபாதர் இவர்தானாம்!....

சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஒரு காட்ஃபாதர் இருப்பார்கள். அதாவது, முதன் முதலாக கிடைத்த ஹீரோ வாய்ப்பை சிலர் தட்டிப்பறிக்க முயலும்போது அதை மறுத்து அல்லது முறியடித்து இவர்தான் இந்த படத்தின் ஹீரோ சொல்லும் நபராக அவர்கள் இருப்பார்கள். அந்த இடத்தில் அவர் இல்லாமல் போயிருந்தால் அந்த நடிகர் வளர்ந்திருக்க முடியுமா என சொல்ல முடியாது. ரஜினிக்கும், கமலுக்கும் பாலச்சந்தர் இருந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு விணுச்சக்கரவர்த்தி இருந்தார். பாண்டியனுக்கு ஒரு பாரதிராஜா இருந்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். […]

Update: 2024-05-21 23:00 GMT

சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஒரு காட்ஃபாதர் இருப்பார்கள். அதாவது, முதன் முதலாக கிடைத்த ஹீரோ வாய்ப்பை சிலர் தட்டிப்பறிக்க முயலும்போது அதை மறுத்து அல்லது முறியடித்து இவர்தான் இந்த படத்தின் ஹீரோ சொல்லும் நபராக அவர்கள் இருப்பார்கள். அந்த இடத்தில் அவர் இல்லாமல் போயிருந்தால் அந்த நடிகர் வளர்ந்திருக்க முடியுமா என சொல்ல முடியாது.

ரஜினிக்கும், கமலுக்கும் பாலச்சந்தர் இருந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு விணுச்சக்கரவர்த்தி இருந்தார். பாண்டியனுக்கு ஒரு பாரதிராஜா இருந்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல நடிகைகளுக்கும் அப்படி ஒருவர் இருப்பார். ஏனெனில், சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். அது சரியாக நடக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு அமையாவிட்டால் வாழ்க்கை தடம் புரண்டு விடும். அது எங்கு போய் நம்மை நிறுத்தும் என சொல்ல முடியாது. சினிமாவில் அப்படி வாய்ப்பை இழந்து தடம் புரண்டு காணாமல் போனவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கேப்டன் பேச்சை கேட்காத இயக்குனர்… கோபப்படாமல் விஜயகாந்த் சொன்னது இதுதான்!…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு காட்ஃபாதராக இருந்தவர் பெருமாள் முதலியார். இவரின் நாடக கம்பெனியில்தான் சிவாஜி பல வருடங்கள் நடித்து வந்தார். பராசக்தி கதையையும் நாடகமாக நடத்தியவர்தான் பெருமாள் முதலியார். அது சினிமாவாக உருவானபோது ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார் முதலியார்.

அப்போது சிவாஜி வேண்டாம்.. கே.ஆர்.ராமசாமியை ஹீரோவாக போட்டு எடுக்கலாம் என ஏவிஎம் நிறுவனம் சொன்னபோது, இந்த படத்தில் சிவாஜிதான் ஹீரோ என உறுதியாக இருந்தவர் பெருமாள் முதலியார். பலமுறை எதிர்ப்பு வந்தும் ‘சிவாஜி இல்லையென்றால் இந்த படம் இல்லை’ என சொன்னார். அதனால்தான் கடைசி வரை அவரை தனது தெய்வம் என சொல்லி வந்தார் சிவாஜி.

இதையும் படிங்க: விஜய் அடம்பிடிக்க விட்டுக் கொடுத்த விஜயகாந்த்!.. ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் இப்படிலாம் நடந்திருக்கா?

இப்படி ஒவ்வொரு நடிகரும் உருவானதன் பின்னணியில் ஒரு காட்ஃபாதர் இருந்திருக்கிறார். அதுபோல், விஜயகாந்துக்கு காட்ஃபாதராக இருந்தவர் தயாரிப்பாளர் சிதம்பரம், சட்டம் ஒரு இருட்டறை படத்தில் விஜயகாந்தை நடிக்க வைப்பது என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு செய்தார். அப்போது ‘ஒருதலை ராகம்’ படத்தின் ஹீரோ ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நாம் நடிக்க வேண்டும் என முடிவு செய்து எஸ்.ஏ.சியை அடிக்கடி நேரில் சந்தித்தார்.

ஒருகட்டத்தில் விஜயகாந்தை தூக்கிவிட்டு இவரையே ஹீரோவாக போட்டுவிடலாம் என எஸ்.ஏ.சியே மனம் மாறினார். ஆனால், ‘என் படத்தில் ஒரு தமிழன்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்’ என கறாராக சொல்லிவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் சிதம்பரம். அதன் பின்னர்தான் அப்படத்தின் ஹீரோ விஜயகாந்த் என்பது உறுதியானது. அதுவே விஜயகாந்த் என்கிற ஹீரோ உருவானதற்கு காரணமாக இருந்தது.

Tags:    

Similar News