கமலை வச்சு செய்ய திருப்பதி பிரதர்ஸுக்கு எந்த உரிமையும் இல்லை!.. பிரபல தயாரிப்பாளர் செம போடு!..

உத்தம வில்லன் படத்தின் தோல்விக்காக கமல்ஹாசன் தங்கள் நிறுவனத்துக்கு மேலும் ஒரு படத்தை செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த வாக்கை கமல்ஹாசன் காப்பாற்றவில்லை என சமீபத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர் லிங்குசாமி பேசியது பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் குறித்து மோசமாக பேசும் தொனியில் லிங்குசாமி பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேவர் மகன் போன்ற படத்தை உருவாக்கவே தாங்கள் நினைத்ததாகவும் […]

By :  Saranya M
Update: 2024-05-18 21:00 GMT

உத்தம வில்லன் படத்தின் தோல்விக்காக கமல்ஹாசன் தங்கள் நிறுவனத்துக்கு மேலும் ஒரு படத்தை செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த வாக்கை கமல்ஹாசன் காப்பாற்றவில்லை என சமீபத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர் லிங்குசாமி பேசியது பரபரப்பை கிளப்பியது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் குறித்து மோசமாக பேசும் தொனியில் லிங்குசாமி பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேவர் மகன் போன்ற படத்தை உருவாக்கவே தாங்கள் நினைத்ததாகவும் கமல் தான் இந்த படத்தை செய்தே தீர வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: எல்லாமே எடுப்பா இருந்தா எப்படிம்மா!.. பொன்னியின் செல்வன் நடிகையை பார்த்து பிளாட்டான ஃபேன்ஸ்!..

படம் எடுத்து முடித்த நிலையில் பல கரெக்ஷன் சொன்ன போதும் அதை ஏதும் கண்டுகொள்ளாமல் கமல்ஹாசன் அப்படியே எடுத்ததுதான் உத்தம வில்லன் படம் தோல்வியைத் தழுவ காரணம் என லிங்குசாமி பேசி இருந்தார்.

உத்தமவில்லன் படம் தோல்வியை தழுவிய நிலையில் அதற்கு பதிலாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் இன்னொரு படத்தை நடித்து கொடுப்பதாக கமல் கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவர் சொன்னதை செய்யவில்லை என லிங்குசாமி பேசினார். இந்நிலையில் அது தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் தேனப்பன் உத்தம வில்லன் பஞ்சாயத்துக்காக கமல்ஹாசனை வச்சு செய்வது தவறான செயல் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெற்றிமாறனுடன் விமானத்தில் பயணம் செய்த ‘ஸ்டார்’ ஹீரோயின்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

உத்தம வில்லன் படம் ரிலீஸ் ஆகும் போது அந்த படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தது ஞானவேல் ராஜா தான் என்றும் ரைட்ஸ் மொத்தமும் அவரிடம் சென்று விட்டதாகவும் திருப்பதி பிரதர்ஸ் இதில் தலையிடுவது முறையான செயல் அல்ல என்று தேனப்பன் பேசியுள்ளார்.

மேலும், 2015ம் ஆண்டு கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக கூறினார். ஆனால் அந்த நேரத்தில் தங்களால் படம் தயாரிக்க முடியாது என அந்த நிறுவனம் கூறிவிட்டது. அதன் பின்னரும் கமல்ஹாசன் பற்றி இப்படி பேசுவது முறை அல்ல என தேனப்பன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காத்து கொஞ்சம் வேகமா அடிச்சாலே மானம் போயிடும்!.. கிறுகிறுக்க வைத்த கியாரா அத்வானி!..

Tags:    

Similar News