ரகுவரன் லைஃப்ல மிஸ் பண்ணது! தனுஷ் மூலமாக நிறைவேற்றி ஆறுதலடைந்த சம்பவம்
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் டஃப் கொடுத்த வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். ரஜினியுடனே சிவா, பாட்ஷா, முத்து என பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ரஜினிக்கும் மிக பிடித்த நடிகராக விளங்கினார் ரகுவரன். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த ரகுவரன் அவர் நடிக்கும் படங்களிலும் எந்த கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவாராம். ஒரு கொடூரமான வில்லன் கதாபாத்திரம் என்றால் அப்படியேத்தான் வீட்டிலேயும் இருப்பாராம். […]
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் டஃப் கொடுத்த வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். ரஜினியுடனே சிவா, பாட்ஷா, முத்து என பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ரஜினிக்கும் மிக பிடித்த நடிகராக விளங்கினார் ரகுவரன்.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த ரகுவரன் அவர் நடிக்கும் படங்களிலும் எந்த கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவாராம். ஒரு கொடூரமான வில்லன் கதாபாத்திரம் என்றால் அப்படியேத்தான் வீட்டிலேயும் இருப்பாராம்.
இதையும் படிங்க : கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!…
சைலண்டான கேரக்டர் என்றால் அமைதியாகத்தான் இருப்பாராம். அந்தளவுக்கு ஹோம் வொர்க் செய்து தன் அபார நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுவரன். ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய், தனுஷ் என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் ரகுவரன் நடித்திருக்கிறார்,
முதலில் ஹீரோவாகத்தான் அறிமுகமானார். ஆனால் விதி அவரை வில்லனாக பார்க்க ஆசைப்பட்டது. நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரகுவரனுக்கு ரோகினிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இதையும் படிங்க :இப்பதான் தெரியுது! ரகுவரன் ஹீரோவா நடிக்க படம் எப்படி ஹிட் ஆச்சுனு? ஒரு நாள் இரவில் நடந்த சம்பவம்
ஆனால் அவரது மகன் மீது அதிக பாசம் வைத்திருந்தாராம் ரகுவரன். சனிக்கிழமை ஆனால் மகனை ரகுவரனிடம் விட்டு செல்வாராம் ரோகினி. மறு நாள் ஞாயிற்றுக்கிழமை வந்து அழைத்துக் கொண்டு சென்று விடுவாராம். மகன் வரும் போது அப்பா என்று துள்ளிக் கொண்டு ஓடி வருவாராம்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு மகனை அழைத்தே வரவில்லையாம் ரோகினி. இது ரகுவரனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்திருக்கிறது. இப்படியே போக போக அவர் நடித்த கடைசி படமான யாரடி நீ மோகினி படத்தில் நடிப்பதற்காக ரகுவரனை தேடி தனுஷ் வந்தாராம்.
இதையும் படிங்க : அந்த படத்தை பார்த்துட்டு ரகுவரன் இப்படி சொல்லுவாருனு நினைக்கல! சுந்தர்.சி பகிர்ந்த ரகசியம்
அவர் தோள் மீது கையை போட்டு நீ பார்ப்பதற்கு என் மகன் மாதிரியே இருக்க, அதனால் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ரகுவரன் சொன்னாராம். இந்தளவுக்கு மகன்மீது உயிரையே வைத்திருந்திருக்கிறார் ரகுவரன். இந்த தகவலை ரகுவரனின் தம்பி ஒரு பேட்டியில் கூறினார்.