ராஜமௌலி படம் ஆஸ்கர் போனதுக்கும் அவர் குடும்பத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?... ஒரே திகிலா இருக்கேப்பா…
ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான “RRR” திரைப்படம் உலகளவில் 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாக அமைந்தது. உலகளவில் பல நாட்டினரையும் இத்திரைப்படம் கவர்ந்தது. குறிப்பாக அமெரிக்கர்களிடையே இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருது இத்திரைப்படத்திற்கு 20க்கும் மேற்பட்ட சர்வதே விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான […]
ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான “RRR” திரைப்படம் உலகளவில் 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாக அமைந்தது. உலகளவில் பல நாட்டினரையும் இத்திரைப்படம் கவர்ந்தது. குறிப்பாக அமெரிக்கர்களிடையே இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆஸ்கர் விருது
இத்திரைப்படத்திற்கு 20க்கும் மேற்பட்ட சர்வதே விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்கர் வாங்கிய இந்திய பாடலாக இப்பாடல் அமைந்தது. ஆதலால் இந்திய மக்கள் அனைவரும் மிகப்பெருமையோடு “RRR” படக்குழுவினரை பாராட்டினர்.
இந்த நிலையில் ராஜமௌலியின் திரைப்படம் ஆஸ்கர் வாங்கியதற்கும் அவரது குடும்பத்திற்கும் இருக்கும் சம்பந்தம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ராஜமௌலி, தனது தந்தையும் பிரபல கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்தின் கதைகளை மட்டுமே திரைப்படமாக எடுப்பாராம்.
எல்லாரும் ஒரே குடும்பமா?
மேலும் இசையமைப்பாளர் கீரவாணி, ராஜமௌலியின் மிக நெருங்கிய உறவினராம். அதாவது ராஜமௌலியின் மனைவியான ரமாவின் சகோதரிதான் கீரவாணியின் மனைவி. இதில் ராஜமௌலியின் மனைவியான ரமா, ராஜமௌலி திரைப்படங்கள் அனைத்திற்கும் Costume Designer ஆக பணியாற்றி வருகிறார்.
அதே போல் கீரவாணியின் மனைவிதான் புரொடக்சன் மேற்பார்வையை பார்த்துக்கொள்கிறாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ராஜமௌலியின் மகனான கார்த்திகேயன்தான் “RRR” திரைப்படத்தை ஆஸ்கார் அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தாராம்.
ஆதலால்தான் கீரவாணிக்கு ஆஸ்கர் வழங்கியபோது மேடையில், “ராஜமௌலிக்கு நன்றி, கார்த்திகேயாவுக்கு நன்றி” என கூறியிருந்தாராம். “RRR” திரைப்படம் இந்தளவுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு கார்த்திகேயா மிகவும் முக்கியமான நபராக திகழ்ந்தாராம். இவ்வாறு ஒரு முழு குடும்பமே இந்த படைப்பை மிக பிரம்மாண்டமாக உருவாக்க பாடுபட்டிருக்கிறது.
இதையும் படிங்க: திடீரென பாதிரியாராக மாறிய ரகுவரன்… ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?