தக்காளிய வச்சு குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினிகாந்த்… யாருக்கு சொன்னாரு தெரியுமா?...
Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வில்லனாகவே நடித்த இவர் பின் பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வலம் வர ஆரம்பித்தார். இவர் எந்தவொரு படத்தில் நடித்தாலும் தான் முதல்முறை நடிப்பதுபோலவே நினைப்பாராம். படபிடிப்பில் தனது ஷாட் முடிந்ததும் தனக்கான அறைக்கு செல்லாமல் படப்பிடிப்பிலேயே உட்காந்திருப்பாராம். அங்கு இருப்பவர்களையும் மற்றும் படத்திற்கான டெக்னிஷியன்களின் வேலையையும் கவனித்து கொண்டிருப்பாராம். அதன் மூலம் பல […]
Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வில்லனாகவே நடித்த இவர் பின் பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வலம் வர ஆரம்பித்தார்.
இவர் எந்தவொரு படத்தில் நடித்தாலும் தான் முதல்முறை நடிப்பதுபோலவே நினைப்பாராம். படபிடிப்பில் தனது ஷாட் முடிந்ததும் தனக்கான அறைக்கு செல்லாமல் படப்பிடிப்பிலேயே உட்காந்திருப்பாராம். அங்கு இருப்பவர்களையும் மற்றும் படத்திற்கான டெக்னிஷியன்களின் வேலையையும் கவனித்து கொண்டிருப்பாராம். அதன் மூலம் பல விஷயங்களை கற்று கொள்வாராம்.
இதையும் வாசிங்க:ஷாட் ரெடின்னதும் மனுஷன் இத கூடவா மறப்பாரு?.. ஐய்யய்யோ நம்பியாரோட மானம் போயிடுச்சே!.
ஒரு முறை இவர் குசேலன் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அப்படி உட்கார்ந்திருந்தாராம். அப்போது அப்படத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தாராம். அவரை ரஜினி கவனித்துள்ளார். அவர் இன்னொரு அஸிஸ்டெண்ட் டைரக்டரின் வேலையை காப்பி அடித்து அதை போலவே செய்தாராம்.
பின் ரஜினி அந்த நபரை தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அவரும் சற்று பதட்டதுடனே வந்தாராம். அப்போது ரஜினி அவரை உட்கார சொல்லி ஒரு குட்டி கதை சொன்னாராம். ”ஒரு ஊரில் தக்காளி விற்கும் வியாபாரி இருந்தாராம். அவர் தனது தக்காளியை ராஜாவிடம் கொண்டு சென்றுள்ளார். உடனே ராஜா தக்காளி வியாபாரியிடம் உனக்கு பரிசாக என்ன வேண்டும் என கேட்டாராம். அதற்கு அந்த வியாபாரி விலை மதிக்க முடியாத பொருளை தருமாறு கேட்டுள்ளார். உடனே 1000 மூட்டை பொற்காசுகளை பரிசாக கொடுத்துள்ளார்.
இதையும் வாசிங்க:அப்போ ரஜினியை சரியாக கவனிக்கல!.. இப்போ வருத்தப்படுறேன்!.. புலம்பும் இயக்குனர்…
உடனே அதை பார்த்த மற்றொரு விவசாயி தனது பூண்டை மன்னரிடம் கொண்டு வர அவருக்கு அது பிடித்து போய் உனக்கு பரிசாக என்ன வேண்டும் என கேட்டாராம். உடனே அந்த வியாபாரியும் விலைமதிக்க முடியாத பொருளை கேட்டுள்ளார். உடனே அவருக்கு 1000 மூட்டைகளில் தக்காளிகளை கொடுத்தாராம்”.
ஏனெனில் அந்த சமயத்தில் அதுதான் விலைமதிக்க முடியாத பொருளாம். இவ்வாறு ஒரு கதையை கூறி, அதனால் நீ மற்ற உதவி இயக்குனர்களை காப்பி அடிக்காதே.. புதிதாக யோசி என அறிவுரை கூறினாராம். இதை கேட்ட அந்த உதவி இயக்குனர் அசந்துவிட்டாராம்.
இதையும் வாசிங்க:ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..