நாம சும்மா இருந்தாலும் சுழி சும்மா இருக்காது! வேண்டாத வேலையால் ரஜினியிடம் வெறுப்பை சம்பாதிச்ச நடிகர்
Actor Rajini: என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு பெரிய சருக்கை சந்திக்கத்தான் வேண்டிவரும். அந்த வகையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய வளர்ச்சி உயரும் போது ரஜினி எடுத்த தேவையில்லாத முடிவு வள்ளி என்ற படத்தை தயாரித்ததுதான். அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் பெரும் தொகையை இழக்க நேரிட்டது. அதிலிருந்தே ரஜினி கொஞ்சம் உஷாராக இருந்து கொண்டார். மேலும் அவருக்கு தெரிந்த நண்பர்கள் படம் தயாரிக்க போகிறோம் என்று சொன்னாலும் கொஞ்சம் அறிவுரைகளையும் வழங்குவார் ரஜினி. அந்த […]
Actor Rajini: என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு பெரிய சருக்கை சந்திக்கத்தான் வேண்டிவரும். அந்த வகையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய வளர்ச்சி உயரும் போது ரஜினி எடுத்த தேவையில்லாத முடிவு வள்ளி என்ற படத்தை தயாரித்ததுதான். அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் பெரும் தொகையை இழக்க நேரிட்டது.
அதிலிருந்தே ரஜினி கொஞ்சம் உஷாராக இருந்து கொண்டார். மேலும் அவருக்கு தெரிந்த நண்பர்கள் படம் தயாரிக்க போகிறோம் என்று சொன்னாலும் கொஞ்சம் அறிவுரைகளையும் வழங்குவார் ரஜினி. அந்த வகையில் ரஜினியை பெரும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஒன்று முன்பு நடந்திருக்கிறது.
இதையும் படிங்க: சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..
கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் தவக்களையாக அறியப்பட்டவர் நடிகர் சிட்டிபாபு. பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிட்டிபாபுவை தவக்களையாக மாற்றியவர் பாக்யராஜ். முந்தானை முடிச்சு படத்தில் தவக்களையின் பங்கு மிக முக்கியமானது.
இப்படி பல படங்களில் நடித்து சிறுக சிறுக சேர்த்து வைத்து ஒரு வீட்டையும் வாங்கியிருக்கிறார். திடீரென ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை பார்க்க தவக்களை சென்றிருக்கிறார். இவரை பார்த்ததும் ரஜினி ஏதாவது உதவி கேட்க வந்திருப்பாரோ என்று கூட நினைத்தாராம்.
இதையும் படிங்க: உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து ஜெயலலிதாவை தூக்கிய எம்.ஜி.ஆர்!. காரணம் என்ன தெரியுமா?…
ஆனால் தவக்களை சொன்ன செய்தியை கேட்டு ரஜினி பெரும் கோபம் கொண்டாராம். ஏனெனில் தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்த பட விழாவை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் கூறியிருக்கிறார்.
இதை கேட்டதும் மிகவும் டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி. அந்த டென்ஷனில் சிகரெட்டை அதிகமாக பிடித்துக் கொண்டும் இருந்தாராம்.திடீரென தவக்களை இப்படி ஒரு முடிவை எடுத்தது ரஜினியை கடுப்பாக்கியிருக்கிறது. அதனால் கோபத்தில் கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம். ஒரு படத்தை எடுக்கிறது எவ்ளோ ரிஸ்க்? காசு இருக்கிறவனாலேயே நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது. இதில் தவக்களை இப்படி வந்து நின்றதுதான் ரஜினிக்கு வருத்தமாம்.
இதையும் படிங்க : தானா வந்த மாஸ் ஹிட் படங்களை தட்டி விட்ட நடிகர்கள்… டம்மி பீஸாக மாறிய காமெடி! இதுக்கு பேரு தான் கொழுப்பு!
தவக்களை அவர் நண்பர்களுடன் சேர்ந்துதான் அந்த படத்தை தயாரித்தாராம். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை என்பதால் உடன் இருந்த நண்பர்கள் ஓடிவிட்டார்களாம். அதனால் அந்தக் கடனை அடைக்க தவக்களை தான் கட்டியிருந்த வீட்டை விற்று இருந்த பொருள்களை விற்று எதுவும் இல்லாத ஒரு அநாதையாக கடைசியில் ரோட்டில் நின்று கொண்டு எதாவது வேலை இருந்தால் கொடுங்கள் என்று கேட்கிற நிலைமைக்கு வந்துவிட்டாராம்.
இப்படியெல்லாம் ஆகும் என தெரிந்துதான் அன்று ரஜினி கடும் கோபம் கொண்டார் என்றும் ஏற்கனவே ஒரு படத்தை எடுத்து அதனால் என்ன விளைவுகள் வரும் என நன்கு தெரிந்து கொண்டவர் ரஜினி. அதனால் தவக்களையின் சூழ்நிலை என்ன? அவர் சினிமாவிற்கு வந்தவிதம் என எல்லாம் அறிந்தவர் ரஜினி. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு கடும் சூழ்நிலையில் தவக்களை இறைவனடி சேர்ந்தார்.