விளையாட்டுல மதத்தை கலந்து வச்சிருக்கீங்க!.. ரஜினியை வைத்தே லால் சலாம் டீசரை ஓட்டிய ஐஸ்வர்யா!..

தனுஷை வைத்து 3 மற்றும் கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்கி உள்ள படம் தான் லால் சலாம். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது தீபாவளிக்கு வெளியாகி உள்ளது. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமைய்யா, செந்தில், தான்யா ரவிச்சந்திரன் […]

By :  Saranya M
Update: 2023-11-12 00:03 GMT

தனுஷை வைத்து 3 மற்றும் கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்கி உள்ள படம் தான் லால் சலாம். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது தீபாவளிக்கு வெளியாகி உள்ளது.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமைய்யா, செந்தில், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் அடுத்த சம்பவம்.. இதாவது இறைவன் போல இல்லாமல் இருந்தால் சரி!.. சைரன் டீசர் எப்படி இருக்கு?

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சை டிவியில பார்த்து இருப்பீங்க, ரேடியோல கேட்டு இருப்பீங்க, நேர்ல பார்த்து இருக்கீங்களா என விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் விளையாடும் காட்சிகளையும் கடைசியில் விளையாட்டில் மதத்தை கலந்து வச்சிருக்கீங்க என ரஜினிகாந்த் சொல்லும் வசனத்துடன் இந்த டீசர் முடிவடைகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் மதத்தை கலந்து ஊரில் நடக்கும் கலவரத்தை மொய்தீன் பாயான ரஜினிகாந்த் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதையாக இருக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: லியோவுக்கு மட்டும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதியில்லை!.. சல்மான் கான் படத்துக்கு மட்டும் அனுமதியா?..

குறைவான பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமே ஒரே நம்பிக்கை என தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த சின்ன டீசரிலேயே கேமியோ ரோலில் நடித்த நடிகர் ரஜினிகாந்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது முதல் டீசரில் பல ஆக்‌ஷன் காட்சிகளை காட்டியது என ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார்.

ரஜினியை தவிர்த்து பார்த்தால், விஷ்ணு விஷால் யார், விக்ராந்த் யார் அவர்களுக்கு ஜோடி இருக்கா? இல்லையா? என எதுவுமே தெளிவாக தெரியவில்லை. பொங்கல் போட்டியில் அப்பா ரஜினியை வைத்து தனது பிரிந்த கணவர் தனுஷை ஐஸ்வர்யா முறியடிப்பது கஷ்டம் தான்.

Full View

Tags:    

Similar News