ஷங்கரை நம்பி சாம்ராஜ்யத்தை இழந்த ராம்சரண்!.. கேம் சேஞ்சர் ரிலீஸாக இத்தனை வருஷம் ஆகுமா?..
ஆர்ஆர்ஆர் பார்த்துட்டு என்னை ஹாலிவுட்டுக்கு கூப்பிட்டாங்கன்னு போகாம ஷங்கரை நம்பி பல ஆண்டுகளை வீணடித்து விட்டார் ராம்சரண் என அவரது ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே கிடப்பில் போடப்பட்ட கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தையும் எடுக்க ஆரம்பித்தார் ஷங்கர். அதன் விளைவு கேம் சேஞ்சர் படம் இன்னமும் முடியாமல் கால தாமதம் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: லியோ செகண்ட் சிங்கிள்.. ஜெயிலர் ’ஹுகும்’ ரேஞ்சுக்கு பதிலடி பாட்டா இருக்குமா?.. திருப்பிக் கொடுக்கணும்ல!..
சமீபத்தில், கேம் சேஞ்சர் படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், அப்செட்டான படக்குழு கூடுதல் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
அரசியல் சம்பந்தப்பட்ட படம் தானே, இந்த படத்திற்கு ஏன் ஷங்கர் இத்தனை ஆண்டுகளை போட்டு இழு இழுவென இழுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களையே மணிரத்னம் 150 நாட்களில் எடுத்து தள்ளி விட்டாரே என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
இதையும் படிங்க: ரசிகர்களின் காயத்துக்கு மருந்து போட தயாரான விஜய்!.. லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?..
கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பே முடிந்த நிலையிலும், இந்த ஆண்டு அந்த படம் வராது என்றும் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்குத் தான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தில் டீ ஏஜிங், மேக்கப், சிஜி வொர்க் என பல விஷயங்கள் உள்ள நிலையில், அந்த படத்திற்கு தாமதம் என்றாலும் ரசிகர்கள் அமைதியாக இருப்பார்கள்.
ஆனால், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு ராம்சரணின் மார்க்கெட் ரேஞ்ச் எங்கோ உயர்ந்துள்ள நிலையில், அவரது மொத்த சாம்ராஜ்யத்தையும் லேட்டாக்கியே ஷங்கர் சரித்து விடுவார் போல இருக்கு என புலம்பி வருகின்றனர்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆகுமாம். 2025ம் ஆண்டு பொங்கலுக்குத் தான் ராம்சரண் படம் வெளியாகும் என்கிற தகவல்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ராம்சரண் ரசிகர்கள் ரொம்பவே காண்டாகி விட்டனர்.