நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..
Vijayakanth: மதுரையிலிருந்து நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியவர் விஜயகாந்த். இவருக்கு எந்த சினிமா பின்புலமும் இல்லை என்பதால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ஒருவழியாக சின்ன சின்ன சின்ன வேடங்கள் கிடைத்து நடிகரானார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றி அவருக்கு தொடர் வாய்ப்புகளை பெற்று தந்தது. படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். 80,90களில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார்.
இதையும் படிங்க: வடிவேலு அட்வான்ஸ் என் சம்பளமா?!.. விஜயகாந்த் படத்தில் தகராறு செய்த செந்தில்…
கிராமபுறங்களில் ரஜினியை விட விஜயகாந்துக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். சண்டை காட்சிகளில் அதிக ஆர்வமுள்ள விஜயகாந்த் தனது படங்களில் அதிக சண்டை காட்சிகளில் நடித்தார். காலை தூக்கி பின்னால் அடிக்கும் விஜயகாந்தின் ஸ்டைல் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
விஜயகாந்த் படம் என்றால் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்று நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள். அவர்கள் எதிர்பார்த்தததை விட மடங்கு படத்தில் இருக்கும். மற்ற காட்சிகளை விட சண்டை காட்சிகளில் விஜயகாந்த் அதிக ஆர்வத்துடன் நடிப்பாராம்.
இதையும் படிங்க: விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கஜேந்திரா படத்தில் விஜயகாந்துடன் நடித்தேன். அவரை போல ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு சண்டை போடுவது போல ஒரு சண்டை காட்சியை எடுத்தார்கள். தலைகீழாக தொங்கிக்கொண்டு நடிப்பார்.
ஓய்வும் எடுக்க மாட்டார். பெல்ட் கட்டி, பின் அதை கழட்டி என அதிக நேரம் எடுக்கும் என்பதால் நாள் முழுவதும் மரத்து மேலேயே அமர்ந்திருப்பார். சாப்பிட கூட மாட்டார். வெறும் கூல் டிரிங்க்ஸ் மட்டுமே குடிப்பார். சண்டை போடும்போது தோள் சப்பை கீழே இறங்கிவிடும். அதை அவரே பிடித்து மேலே தூக்கி வைத்துக்கொள்வார். அவரை பார்த்து பல நாட்கள் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்’ என ரமேஷ் கண்ணா கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்த விஜயகாந்த்! கேப்டனுக்கு பின்னாடி இப்படி ஒரு வெறியனா?