ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ வைரல்.. ஆதரவாக களமிறங்கிய சூப்பர்ஸ்டார்..!
Rashmika mandanna: சமூக வலைத்தளத்தில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். தற்போது இந்த விஷயம் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் சூப்பர்ஸ்டாரும் தன்னுடைய கண்டனத்தினை தெரிவித்து இருக்கிறார். பெரும்பாலும் நாயகிகளின் படங்களை ஆபாசமாக எடிட் செய்து அதை இணையத்தில் பரப்பி கொண்டு இருப்பார்கள். பலருக்கு நடிகைகள் தானே என அலட்சியமாக கடந்து சென்று விடுவார்கள். ஆனால் அது வைரலாகும் பொழுது பலரும் கண்டனத்தினை வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். […]
Rashmika mandanna: சமூக வலைத்தளத்தில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். தற்போது இந்த விஷயம் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் சூப்பர்ஸ்டாரும் தன்னுடைய கண்டனத்தினை தெரிவித்து இருக்கிறார்.
பெரும்பாலும் நாயகிகளின் படங்களை ஆபாசமாக எடிட் செய்து அதை இணையத்தில் பரப்பி கொண்டு இருப்பார்கள். பலருக்கு நடிகைகள் தானே என அலட்சியமாக கடந்து சென்று விடுவார்கள். ஆனால் அது வைரலாகும் பொழுது பலரும் கண்டனத்தினை வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் என்ன? பொன்னியின் செல்வன் ரிக்கார்டையே பிரேக் செஞ்ச லியோ!
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அரை நிர்வாண உடையில் லிப்டுக்குள் வருவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்க்கும் போதே அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பது தெரிந்து விட்டது. இருந்தும் இதை செய்தவர்களுக்கு எதிராக ரசிகர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.
இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர் ஒருவர், இந்தியாவில் டீப்ஃபேக்கைக் கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை இருப்பதாக ட்வீட் தட்டி இருந்தார். அதில் ராஷ்மிகாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவும் இணைக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: த்ரிஷா பேசும் போது மனப்பாடம் செய்தாரா விஜய்?.. வெற்றி விழாவை மரண ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!..
இது ஒரிஜினலாக இன்ஸ்டாகிராமில் 415கே பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரிட்டிஷ்-இந்தியப் பெண் சாரா படேலின் வீடியோ. இந்த வீடியோவை சாரா அக்டோபர் 9 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்வீட்களை ஷேர் செய்த அமிதாப் பச்சன் இது சட்டத்திற்கு வலுவான வழக்கு எனத் தெரிவித்து இருக்கிறார். தற்போது ராஷ்மிகாவிற்கு ஆதரவாக பலரும் ட்விட்டரில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா எடிட் வீடியோ: