த்ரிஷா பேசும் போது மனப்பாடம் செய்தாரா விஜய்?.. வெற்றி விழாவை மரண ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!..

லியோ வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், சன் டிவியில் நேற்று ஒளிபரப்பானது. அதில், நடிகர் விஜய் பேசியது செயற்கைத் தனமாக இருந்ததாகவும், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கும் போது விஜய் தனது குட்டி ஸ்டோரியை மனப்பாடம் செய்துக் கொண்டிருந்ததாகவும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

லியோ படத்தின் வெற்றி விழா போலவே நடைபெறவில்லை என்றும் படத்தில் நடித்த யாருமே கலெக்‌ஷன் பற்றியெல்லாம் வாய் திறக்காமல் ஏதோ விட்டுப் போன ஆடியோ வெளியீட்டு விழா மீண்டும் நடைபெற்றது போல இருந்தது என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: லைஃப்பை தொலைச்சிட்டியே ரத்னா!.. கழுகை பகைச்ச காக்காவுக்கே அந்த அடின்னா.. காக்கா குஞ்சுக்கு?..

லோகேஷ் கனகராஜ் படம் வெற்றிப் படம் என்றும் விஜய்க்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்து கிளம்பி விட்டார். பெரிதாக யாருமே வராத சஞ்சய் தத்தை பாராட்டவோ அவர் பற்றி பேசவும் இல்லை.

இந்நிலையில், கடைசியாக நடிகர் விஜய் ஸ்டேஜில் ஏறி ஆட்டம் போட்டது. டிடி நீலகண்டன் நினைவுப்படுத்தியதும் ரஞ்சிதமே கிஸ் கொடுத்தது. அதன் பின்னர் அவர் பாடல் வரிகள் தொடர்பான சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியது, அந்த காக்கா - கழுகு என பேசிவிட்டு கேப் விட்டு அரங்கத்தையே சிரிக்க வைத்தது என அவரது பேச்சே ஏற்கனவே ஒத்திகை பார்க்க்பட்ட ஸ்க்ரிப்டட் பேச்சு போல உள்ளதாக விமர்சனங்களை ரஜினி ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் பேரைக் கெடுத்துக்கிட்ட கமல்! லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம் – மூஞ்சியை எங்க வைப்பாருனு தெரியலயே

நடிகை த்ரிஷா பேசும் போது, நடிகர் விஜய் அதை கவனித்தது போலவே தெரியவில்லை என்றும் அவரது வாய் மனப்பாடம் செய்வது போலவே உள்ளதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த வயதிலும் தனது படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக ரஜினி ஒரு மணி நேரம் பேசினார். ஆனால், வாயே திறக்காமல் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து விட்டு விஜய் சிறப்பாக எல்லாத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it