கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!...
நடிகர் ரகுவரன் போன்ற ஒரு மிரட்டலான வில்லன் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கிடைப்பது கஷ்டம்தான். மிகவும் ஸ்டைலான வில்லன் என்றால் அது ரகுவரன்தான். அவரின் குரலும், மாடுலேஷனும் போதும், படத்தில் யார் ஹீரோவாக இருந்தாலும் இவர் தெரிக்கவிட்டு விடுவார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்துள்ளார். முதலில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரகுவரன் பிறகு வில்லனாக மாறினார். ரஜினியுடன் முத்து, பாட்ஷா, மனிதன், சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், […]
நடிகர் ரகுவரன் போன்ற ஒரு மிரட்டலான வில்லன் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கிடைப்பது கஷ்டம்தான். மிகவும் ஸ்டைலான வில்லன் என்றால் அது ரகுவரன்தான். அவரின் குரலும், மாடுலேஷனும் போதும், படத்தில் யார் ஹீரோவாக இருந்தாலும் இவர் தெரிக்கவிட்டு விடுவார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுக்கும் வில்லனாக நடித்துள்ளார்.
முதலில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரகுவரன் பிறகு வில்லனாக மாறினார். ரஜினியுடன் முத்து, பாட்ஷா, மனிதன், சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி vs விஜய்! சூப்பர்ஸ்டார் பட்டமே நிரந்தரமில்லை – ஏன்டா போட்டி போடுறீங்க? கடுப்பான சேரன்
இவர் கடைசியாக ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் ரகுவரன் ஆனால் கமல்ஹாசனுடன் இவர் நடிக்கவே இல்லை. இதற்கான காரணத்தை அவரது தம்பி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் ரகுவரனுக்கு கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இயக்குநர் முடி வெட்ட சொன்னதால், ரகுவரனால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். நாயகன் படத்தில் நடிகர் நாசர் நடித்த போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த படத்திற்காக தலைமுடியை வெட்ட வேண்டும் என்று மணிரத்ணம் தெரிவித்தார்.
ஆனால் அந்த சமயத்தில் வேறு சில படங்களில் நடித்து வந்ததால், இந்த படத்திற்காக முடி வெட்ட முடியாத நிலை இருந்துள்ளது. முடி வெட்டினால் கண்டினியுட்டி மிஸ் ஆகும் என்பதால், நாயகன் படத்தில் நிடக்க ரகுவரன் மறுத்துவிட்டார். இதனால் தான் ரகுவரனால் நாயகன் படத்தில் நடிக்கமுடியவில்லை என்று அவரின் தம்பி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் குடும்பம் இதுதானாம்!.. தமன்னாவ காட்டி ஏமாத்திப்புட்டாய்ங்க!…