ரெண்டு பேரையும் லவ் பண்ணு...! ரேவதியிடம் கூச்சப்படாமல் கூறிய அந்த இயக்குனர்...
கவர்ச்சி என்பதை உடையில் மட்டும் காட்டி பிரபலமான நடிகைகள் மத்தியில் சுடிதார், சேலையில் மிகவும் பௌயமாக தன் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் அதுவும் 80 களில் உச்சம் தொட்டவர் நடிகை ரேவதி. மிகவும் தைரியமாக எதையும் சுலபமாக கையாளும் திறன் கொண்டவர் நடிகை ரேவதி. இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். சினிமா மட்டுமில்லாமல் டப்பிங், சீரியல், பாடகர் என பன்முகத் திறமைகளை பெற்றவர். எத்தனை படங்கள் வந்தாலும் […]
கவர்ச்சி என்பதை உடையில் மட்டும் காட்டி பிரபலமான நடிகைகள் மத்தியில் சுடிதார், சேலையில் மிகவும் பௌயமாக தன் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் அதுவும் 80 களில் உச்சம் தொட்டவர் நடிகை ரேவதி. மிகவும் தைரியமாக எதையும் சுலபமாக கையாளும் திறன் கொண்டவர் நடிகை ரேவதி.
இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். சினிமா மட்டுமில்லாமல் டப்பிங், சீரியல், பாடகர் என பன்முகத் திறமைகளை பெற்றவர். எத்தனை படங்கள் வந்தாலும் ரேவதி என்று நினைக்கும் போது நம் கண்முன்னே வந்து நிற்கும் படம் மௌனராகம்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி நடிப்பில் உருவான இந்த படம் ஃபிளாஸ் பேக் தன் கடந்தகால காதல் கதை, இரண்டாவது பாதி கட்டிய கணவனுடன் வாழவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் திணரும் ஒரு பெண்ணை பற்றிய கதைதான் மௌனராகம். காதலனாக கார்த்திக், கணவனாக மோகன் நடித்திருப்பார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
மணிரத்னம் இரண்டு கதாபாத்திரங்களை என் இரண்டு கைகளில் கொடுத்து இரண்டு பேருமே உன் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் அதனால் இரண்டு பேரையும் நீ லவ் பண்ணு என்று சொல்லி கதைய சொன்னாராம். இதை நடிகை ரேவதி ஒரு பேட்டியில் தன் அனுபவத்தை பற்றி மிகவும் ரசித்து கூறினார்.