சூரியவம்சத்திற்கு பிறகு இணைந்த சரத்குமார் தேவயானி.. சித்தார்த்தின் 3bhk டீசர் எப்படி இருக்கு?..
Actor Siddharth: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கதாநாயகனாக நடித்து வந்தாலும் ஒரு முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றார் நடிகர் சித்தார்த். ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். சித்தார்த் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து கடைசியாக மிஸ் யூ என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
கைவசம் இருக்கும் படங்கள்: நடிகர் சித்தார்த் தனது கைவசம் டெஸ்ட் என்கின்ற திரைப்படத்தை வைத்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய 40வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை குருதியாட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி வருகின்றார். மேலும் மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றது.
சித்தார்த்த 40: இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு பிரபல பாடகி ஜெய்ஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைக்கின்றார்.
தற்போது இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. படத்திற்கு 3 பிஹெச்கே என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயரை வித்தியாசமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.
3 பிஹெச்கே டீசர்: இந்த டீசரை பார்க்கும்போது ஒரு நடுத்தர வீட்டில் இருக்கும் ஒரு அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி ஆகியோரின் கதையை மையமாக வைத்து அவர்களை சுற்றி நடப்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை போல இருக்கின்றது. காதல், காமெடி கலந்த ஒரு சிறந்த படமாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. டீசரின் தொடக்கத்தில் ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று சித்தார்த் வாய்ஸில் தொடங்குகின்றது.
பின்னர் இது ராஜா கதை கிடையாது. நம்ம வீட்ட பத்தின கதை.. என்று சித்தார்த் பேசுகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு அதாவது சூரியவம்சம் திரைப்படத்திற்கு பிறகு சரத்குமார் மற்றும் தேவயானி இந்த திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டைட்டில் டீசர் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படம் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.