விடாமுயற்சி படத்துக்கு வந்த முதல் விமர்சனம் இதுதாங்க... அப்படின்னா படம் மெகாஹிட்தான்!
அஜீத்துக்கு 2023 பொங்கல் தினத்தில் வெளியான படம் துணிவு. அதன்பிறகு 2 வருடங்களாக அவரது படம் வெளியாகவில்லை. கடந்த வருடம் தீபாவளி ரிலீஸ்னு சொன்னாங்க. அதுவும் இல்ல. அப்புறம் பொங்கல் 2025ன்னாங்க. அதுவும் இல்ல. இப்படி பல தடைகளை மீறி ஒரு வழியாக விடாமுயற்சி படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
ஓபனிங் ஷோ: அஜீத்துடன் திரிஷா, ரெஜினா, அர்ஜூன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதனால் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. படத்தின் டிரெய்லர், பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் இந்தப் படத்தின் ஓபனிங் ஷோவுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தமிழகத்தில் 2 நாள்களுக்கு முன்னர் தான் புக்கிங் ஓப்பன் செய்தார்கள். வெளிநாடுகளில் சில வாரங்களுக்கு முன்பே புக்கிங் தொடங்கப்பட்டு விட்டது.
முதல் விமர்சனம்: ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. மலேசியாவில் இதுவரை எந்தப் படமும் செய்யாத அளவிற்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாம். மலேசியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் புக்கிங் கலெக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு வெளிநாடுகளில் சென்சார் செய்துள்ளனர். அங்கு படம் பார்த்த சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டியுள்ளனர். படத்தில் ஆக்ஷன் காட்சிகளும், மேக்கிங் விதமும் சூப்பராக இருப்பதாக தெரிவித்து வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.
மிகப்பெரிய வசூல் சாதனை: வெளிநாடுகளில் அஜீத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கூட்டம் உள்ளது. அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைக் கொடுக்கும் என்கின்றனர். அந்த வகையில் விடாமுயற்சி படம் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடித்த படம் விடாமுயற்சி. அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசன்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் கூடுதல் பலம் ஆக்ஷன் காட்சிகள்தான் என்று தெரிகிறது.
இதுதவிர படத்தில் சேஸிங் காட்சிகளும் அட்டகாசமாக உள்ளது. அஜீத் ஏற்கனவே பைக், கார் ரேஸர் என்பதால் இந்தக் காட்சிகள் வழக்கத்துக்கு மாறாக சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.