அட்லீக்கு ஷாருக்கான் ஏ ஆர் முருகதாஸுக்கு சல்மான்கானா?.. 'சிக்கந்தர்' டீசர் எப்படி இருக்கு?..

By :  Ramya
Update: 2024-12-28 15:21 GMT

sikandar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்: தமிழ் சினிமாவில் தீனா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். ரமணா, ஏழாம் அறிவு, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஸ்பைடர் உள்ளிட்ட இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் பல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.

இவர் தர்பார் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது .அதன் பிறகு பெரிய அளவு திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த ஏ ஆர் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து எஸ் கே 23 என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.


இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைய உள்ளது அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் இணைய இருப்பதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஒரு ருக்மணி நடிக்கின்றார். மேலும் அனிருத் படத்திற்கு இசையமைக்கின்றார்.

சிக்கந்தர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வந்தாலும் மற்றொருபுறம் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் திரைப்படத்தையும் பாலிவுட்டில் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகின்றார். மேலும் சத்யராஜ் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

சல்மான் கான் பிறந்தநாள்: சிக்கந்தர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று டிசம்பர் 27ஆம் தேதி சல்மான் கான் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து டீசர் வெளியீட்டை ஒத்தி வைத்திருந்தார்கள். இன்று படக்குழுவினர் டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தின் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

டீசர் எப்படி இருக்கு? ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சஜித் நதியத்வாலா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதலில் இந்த டீசரில் துப்பாக்கிகள் நிறைந்த ஒரு இடத்தை காட்டுகிறார்கள். அங்கு ஏகப்பட்ட போர் வீரர்களின் சிலைகள் இருக்கின்றது. அந்த இடத்திற்கு தனி ஒரு நபராக உள்ளே நுழைகிறார் சல்மான் கான்.

பின்னர் திடீரென்று சிலைகள் அனைத்துமே நபர்களாக இருக்க அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை வைத்து சல்மான் கானை சுற்றி வளைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை வாங்கியே அவர்களை அடித்து துவம்சம் செய்கின்றார் சல்மான்கான். டீசரில் பெரிய அளவு வசனங்கள் இல்லை என்றாலும் இது ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்பது தெரிய வருகின்றது.


இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருக்கிறார்கள். டீசரில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விஷயம் இல்லை என்றாலும் முழுதும் முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படம் வெளிவரும் என்பது தெரிய வந்துள்ளது. சல்மான் கான் தவிர எந்த நடிகர்களின் புகைப்படங்களும் இந்த டீசரில் இடம் பெறவில்லை.

இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்கின்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கி வரும் சிக்கந்தர் திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Full View
Tags:    

Similar News