ஹார்ட்பீட் சீரிஸ் விடுங்க டாக்டர் சீரிஸ் பாத்துருக்கீங்களா… ஹீரோ நம்ம வில்லன்…

By :  AKHILAN
Published On 2025-06-12 15:46 IST   |   Updated On 2025-06-12 15:46:00 IST

Doctors: வெப் சீரிஸ் என்றாலே தற்போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் நிலையில் தற்போது வைரலாகி வரும் முக்கிய சீரிஸான டாக்டர்ஸ் குறித்த பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பேசும் விமர்சனம் இங்கே.

தமிழ் ரசிகர்களுக்கு சமீபத்திய பேவரிட் வெப்சீரிஸை லிஸ்ட் போட சொன்னால் அதன் முக்கிய இடம் பிடிப்பது ஹார்ட் பீட். ஏனெனில் மற்ற சீரிஸ்கள் போல இல்லாமல் மருத்துவத்தினை மையமாக வைத்து இந்த சீரிஸ் வெளியாவதால் முதல் சீசன் செம ஹிட் அடித்தது.

தற்போது இதன் இரண்டாவது சீசன் ஓடி வருகிறது. இந்நிலையில் இதை போன்ற அதே கதையை வைத்து வெளியான வெப்சீரிஸ் தான் டாக்டர்ஸ். ஒரு பெரிய மருத்துவமனையில் இருக்கும் டாக்டர்களின் வாழ்க்கையையும், பின்னர் அங்கு வரும் நோயாளி பற்றிய கதை. 

 

இஷான் என்ற மிகப்பெரிய மருத்துவர் தன்னுடைய ஒரு ஆபரேஷனில் செய்த தவறால் இன்னொரு போட்டி மருத்துவரான தவாலுக்கு கை செயலிழந்து விடுகிறது. அவரின் தங்கை நித்யா தன்னுடைய அண்ணன் பிரச்னைக்காக ஹீரோவை பழி வாங்கும் முடிவில் வருகிறார்.

ஆனால் அவருக்கு இஷான் மீதே காதல் மலர்ந்து விடுகிறது. தான் செய்த தவறுக்காக 4 வருடமாக ஒரு ஆராய்ச்சியில் தவால் கையை சரி செய்ய போராடிக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் இஷானின் முதல் காதலி அவருடனான உறவுக்கு இருக்கும் பிரச்னையும் கூறப்பட்டுள்ளது.

ஹீரோ இஷான் தமிழில் அயலான் திரைப்படத்தின் வில்லனான ஷரத் கெல்கர். வில்லனாக பார்த்த அவர் ஹீரோவாக செட்டாவார் என சந்தேகத்துடன் சீரிஸ் தொடங்கினாலும் எபிசோட் செல்ல செல்ல நம்மையே வெட்கப்பட வைக்கும் அளவு கேஷுவலாக ரொமான்ஸ் மன்னனாக நடித்துள்ளார்.

மருத்துவமனையில் நடக்கும் பிரச்னைகளை ஓவர் டிராமாவாக இல்லாமல் சொல்லி இருக்கின்றனர். முக்கியமாக சினிமாத்தனமாக வரும் பெரிய நோயில் இருந்து கூட தப்பிக்கலாம் என்பது இல்லாமல் நிஜத்தினை சொல்லி பல இறப்புகளை காட்டி ஆச்சரியப்படுத்துகின்றனர்.

மற்ற மொழி வெப்சீரிஸ் போல சில முத்தக்காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் கூட இருந்தாலும் முகம் சுழிக்கும் வகையில் இல்லாமல் கதையோடு செல்கிறது. நிறைய டாக்டர்கள் என்பதால் பல இடங்களில் முக்கிய காட்சிகளை கணிக்க மிஸ்ஸாகி விடுகிறது. 

 

10 எபிசோட்களாக இருந்தாலும் எங்குமே பெரிய அளவில் போர் அடிக்காமல் செல்கிறது. நித்யா மற்றும் இஷான் காதல் காட்சிகள் ரொம்பவே எதார்த்தமாக எடுத்துள்ளனர். அதிலும் ஹீரோவாக கிடைத்த வாய்ப்பை ஷரத் சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்.

ஆனால் கடைசி எபிசோட்டில் வெற்றிக்கரமாக ஆபரேஷனை செய்துவிட்டு தவாலை காப்பாற்றி விடுகிறார். ஆனால் இங்கிருந்து சென்று விட வேண்டும் என தவால் இஷானிடம் கூறிவிடுகிறார். அவர் சொன்னதற்காக நித்யாவை பிரிந்து இஷான் செல்ல பார்க்கும் நம்மையே ஃபீல் செய்ய வைக்கின்றனர். மிஸ் செய்யாம ஹாட்ஸ்டாரில் பார்த்துடுங்க.

Tags:    

Similar News