புலி போல நடக்கச் சொன்னார் லோகேஷ் கனகராஜ்!.. கூலி பட அனுபவம் பகிர்ந்த குபேரா நடிகர்!..

புலி போல தன்னை நடந்து வரச் சொன்னார் என்றும் படம் முழுக்க விசில் சத்தம் காதை கிழிக்கப் போகுது என்றும் கூலி படத்துக்கு செம ஹைப் ஏற்றியுள்ளார் நாகார்ஜூனா.;

By :  SARANYA
Published On 2025-06-13 13:32 IST   |   Updated On 2025-06-13 13:32:00 IST

டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா தற்போது கூலி, குபேரா போன்ற தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜூனா ஒரு முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திலும் நாகார்ஜூனா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, அமீர் கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கூலி ஆகஸ்ட் 14, 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகளவில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.

நாகார்ஜூனா தனது இளைய மகன் அகில் அக்கினேனி திருமண கொண்டாட்டத்தில் பிஸியாக இருந்த நிலையில் பேட்டி அளித்த அவர், லோகேஷ் கனகராஜ் மிக அற்புதமான குணம் கொண்டவர், அவர் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களை எடுத்துக்கொண்டால் படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பிரம்மிப்பாக இருக்கும், அதுவும் விக்ரம் படத்தில் ஃபஹத், விஜய் சேதுபதி மற்றும் ஏஜென்ட் டீனா கேரக்டர் எல்லாம் பார்க்க வியப்பாக இருந்தது. அதை தொடர்ந்து கூலி படத்தில் ரஜினிகாந்தை தவிர உபேந்திரா, அமீர் கான், நான் என பலருக்கும் நல்ல கேரக்டர் உண்டு, எங்களுடைய கதாப்பாத்திரங்கள் படத்திற்கு ஒரு ட்ரம்ப் கார்டாகவும் தனித்துவமாக தெரியும் வகையில் அவர் இப்படத்தை இயக்கியுள்ளார் என பேசியுள்ளார்.

மேலும், புலி போல தன்னை நடந்து வரச் சொன்னார் என்றும் படம் முழுக்க விசில், விசில், விசில் சத்தம் காதை கிழிக்கப் போகுது என்றும் கூலி படத்துக்கு செம ஹைப் ஏற்றியுள்ளார்.

Tags:    

Similar News