Eleven: பக்கா திரில்லர் ஜானரில் மிஸ் பண்ணக்கூடாத பரபரப்பு… எப்படி இருக்கும் லெவன் திரைப்படம்?
Eleven: மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் படங்களுக்கு இடையே வெளியாகி இருக்கும் இந்த லெவன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மர்மமான முறையில் தொடர்ந்து பலர் எரித்து கொல்லப்பட்ட அதை விசாரிக்க வரும் அதிகாரியாக சுரேஷ் சந்திரா நடித்து இருக்கிறார். படத்தின் திரைக்கதை முதல் பாதியில் கொஞ்சம் சோதிக்கும் வகையில் அமைந்தாலும் இரண்டாம் பாதியில் சூடு பிடிக்கிறது.
ஹீரோ சுரேஷ் சந்திரா படம் முழுவதும் எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் ஆரவாரம் இல்லாமல் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் அது நமக்கே கடுப்பை கிளப்புகிறது. இருந்தும் கிளைமேக்ஸில் அதற்கு ஈடுகட்டும் வகையில் நடிப்பில் மெறுகேற்றி இருக்கிறார்.
திரில்லர் ஜானர் படங்களுக்கு ஒவ்வொரு கேரக்டருமே முக்கியம். அந்த வகையில் இந்த படத்தில் நடித்திருந்த துணை பாத்திரங்கள் பெரும் பலம். அதிலும் திலீபன் பொறுப்பை உணர்ந்து நடித்து இருக்கிறார். ஆனால் ஹீரோயினுக்கு வலு இல்லாத டம்மி ரோல் தான்.
படத்தின் இன்னொரு பலமாக அமைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகன். சின்ன மழை காட்சியினை சோகத்திலும், கோபத்திலும் என வித்தியாசப்படுத்தி அசர வைத்துள்ளார். டி இமான் இசையில் பாடல்கள் பெரிய ஹிட்டில்லை என்றாலும் பின்னணி இசையால் தலை தப்பி இருக்கிறது.
படத்தில் அந்த இரட்டையர்கள் பிளாஷ்பேக் காட்சிகள் தரமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு நடந்த புல்லியிங் பிரச்னையை இன்னும் ஆழமாக காட்டி இருந்தால் படத்தில் இன்னும் ஒன்ற முடிந்து இருக்கும். லாஜிக் மீறல்கள் எக்கசக்கம் என்றாலும் படம் ஒரு முறை பார்க்க பக்கா டைம் பாஸ்தான்.