Office: ஹாட்ஸ்டாரில் ஹிட் அடிக்கும் ஆபிஸ் வெப்சீரிஸ்… எப்படி இருக்கு? வொர்த்தா? வெத்தா?

By :  AKHILAN
Published On 2025-06-10 10:03 IST   |   Updated On 2025-06-10 10:03:00 IST

Office: ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஒளிபரப்பப்பட்டு வரும் ஆபிஸ் வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது என்ற பிளஸ், மைனஸ் பேசும் ரிவியூ இங்கே.

சமீபகாலமாக ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் ஸ்பெஷலாக அவ்வப்போது வெப்சீரிஸ் தயாரிக்கப்பட்டு வெளியிடுவது வழக்கம். ஹார்ட்பீட், கனா காணும் காலங்கள், உப்பு புளி காரம் என தொடர்ச்சியாக பல வெப்சீரிஸ்கள் ஹிட்டடித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஹாட்ஸ்டாரில் ஆபிஸ் வெப்சீரிஸ் வெள்ளிக்கிழமை தோறும் நான்கு எபிசோட்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. குரு லட்சுமணன், ஸ்மேஹா, கீர்த்திவேல், வைஷாலி, ஆர்ஜே சரித்திரன், தமிழ்வேணி, பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்ட பலருக்கும் தெரிந்த முகங்கள் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர்.

பாரி, இந்து, தாசில்தார், துணை தாசில்தார், ஐடி டீம் உள்ளிட்டோர் தான் இந்த சீரிஸின் முக்கிய கேரக்டர்களாக உள்ளனர். தமிழ்நாட்டு தாசில்தார் அலுவலகத்தில் டிஜிட்டலுக்காக ஐடி டீம் என கார்ப்ரேட் ஆபீஸில் இருந்து நால்வர் வேலைக்கு வந்துள்ளனர். 

 

அரசாங்க ஊழியர்களுக்கும், கார்ப்ரேட் ஊழியர்களுக்கும் இடையிலான சண்டை, நட்பு உள்ளிட்ட கதை தான். இதில் பாரியின் முன்னாள் காதலி இந்துவும் இதே அலுவலகத்தில் இருப்பதால் மீண்டும் அவர்களுக்கு காதல் மலர்ந்துவிட அது ஒரு ரூட்டாக செல்கிறது.

இதுமட்டுமல்லாமல் பொறாம்போக்கு நிலத்தை அரசு ஊழியர்களை கையில் போட்டுக்கொண்டு அந்த ஊரின் கவுன்சிலர் யாருக்கும் தெரியாமல் ஒரு வில்லத்தனம் செய்கிறார். இதை பாரி மோப்பம் பிடித்து விட எதோ தப்பு இருப்பதாக சந்தேகம் கொள்கிறார்.

இந்துவின் மாமா தான் இந்த கவுன்சிலர் என்பதால் இவருக்கு பாரியின் மீது சந்தேகம் வந்து இவர்கள் காதலை பிரிக்க முடிவெடுக்கிறார். காமெடியை கூட ஓவர் டோஸ் இல்லாமல் கொடுத்து இருப்பதால் ரசிக்க வைக்கின்றனர். கிட்டத்தட்ட நடக்கும் விஷயங்கள் எல்லாமே சினிமா கதை போல இல்லாமல் எதார்த்தமாக காட்சிகளை கோர்வையாக இணைத்துள்ளனர். தற்போது ஐடி ஊழியர்கள் வேலையை முடிப்பார்களா? இந்து மற்றும் பாரி இணைவார்களா என ஏகப்பட்ட கேள்விகளுக்கு இனிவரும் எபிசோட்களில் விடை கிடைக்கும்.

Tags:    

Similar News